சினிமா

சூப்பர் நியூஸ்.. விரைவில் தொடங்கும் வேட்டையாடு விளையாடு 2.. கெளதம் மேனன் திட்டம்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்கள் ஒருவரானவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.இவர் எடுக்கும் திரைப்படங்களில் எத்தனை வருடம் கழித்து பார்த்தாலும் முதல் முறை பார்த்தது போன்ற அதே அனுபவத்தை தரக்கூடியதாக இருக்கும் .இவர் எடுத்த மின்னலே, காக்க காக்க,வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற திரைப்படத்தில் வரும் காதல் கதைகள் இன்றும் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.

2006 ஆம் ஆண்டு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசனின் நடிப்பில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இந்தத் திரைப்படத்தில் ஒரு ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக அமைந்தது. வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் உலகநாயகன் கமலஹாசன் உடைய எதார்த்தமான நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தந்தது.

பெண்களைக் குறி வைத்து கொலை செய்யும் இரண்டு சீரியல் கில்லர்களை காவல் அதிகாரியான நடிகர் கமலஹாசன் கண்டுபிடிப்பது போன்ற கதைக்களத்தை இந்த திரைப்படம் அமைந்திருந்தது. இந்த சீரியல் கில்லர்களை கண்டுபிடிப்பதற்காக நடிகர் கமலஹாசன் எடுக்கும் முயற்சிகள் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்திருக்கும் .

இந்தப் படத்தின் கதாநாயகியாக நடிகை ஜோதிகா நடித்திருந்தார்.கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வரும் திரைப்படங்களில் காதல் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது போன்று இந்தத் திரைப்படத்திலும் கமலஹாசன் மற்றும் ஜோதிகாவிற்கு இடையில் வரும் கண்ணியமான காதல் காட்சிகளும் மிக அருமையாக அமைந்திருந்தது.

வேட்டையாடு விளையாடு திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார் இந்த திரைப்படத்தின் பாடல்களும் வெற்றி பெற்று ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதுஇதைத்தொடர்ந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு திட்டமிடவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.மேலும் இந்தப் படத்திலும் நடிகர் கமல் தான் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாக்கி வருகிறது.

தற்பொழுது இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனம்தான் தயாரித்தது .இன்னும் இந்த நிறுவனமும் கௌதம் வாசுதேவ் மேனனும் இணைந்து ஜோசுவா இமைப்போல் காக்கணும் என்ற திரைப்படத்தையும் இயக்கி இருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தின் டீசரும் வெளியாககியது.

இந்த படத்தின் கதாநாயகராக நடிகர் வருண் நடித்திருக்கிறார். இவர் வேல்ஸ் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உடைய குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கப்பட்ட போகன், கோமாளி,என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவை .இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் வேல்ஸ் நிறுவனத்துக்கும் நல்ல நட்புறவு இருப்பதால் வேட்டையாடு விளையாடு 2 திரைப்படமும் நிச்சயம் சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

TOP STORIES

To Top