சினிமா

துணிவு 3வது பாடல் அறிவிப்பு ! இன்ட்ரோ பாட்டில் எப்போதும் பாக்காத கிளாசான அஜித்தைப் பார்ப்பீர்கள் – படக்குழு நம்பிக்கை

Thunivu third single gangstaa

பொங்கலுக்கு இன்னும் 20 நாட்களே இருக்கும் நிலையில் வாரிசு, துணிவு இரு படக்குழுவினரும் அடுத்தடுத்து அப்டேட்கள் வழங்கி புரோமோஷன்களை சிறப்பாக செய்து வருகின்றனர். நேற்று மாலை வாரிசு படத்தின் அம்மா சென்டிமென்ட் கொண்ட மூன்றாவது பாடல் அபார வரவேற்பு பெற்றது. சித்ரா அம்மா குரலில் மிகவும் மென்மையாக இருந்தது. அடுத்து வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

மறுபக்கம் துணிவு படக்குழுவினர் இதுவரை 2 பாடல்கள் வெளியிட்டுள்ளனர். கிப்ரான் இசையில் இரு பாடல்களையும் இளம் திறமையாளர் வைஷாக் எழுதினார். சில்லா சில்லா பாடலை அனிருத்தும் அடுத்த வந்த காசேதான் கடவுளடா பாட்டை வைஷாக்கே பாடினார். 2 பாடல்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

அந்த ஆனந்தத்தை அதே நிலையில் வைத்திருக்கும் எண்ணத்தில் கிப்ரான், மூன்றாவது பாட்டின் அறிவிப்பை கொடுத்துள்ளார். அடுத்து வரவிருக்கும் பாட்டு தான் இன்ட்ரோ சாங். இந்தப் பாட்டில் அஜித்தின் லுக் எப்போதும் காணாத அளவு வித்தியாசமாகவும் ரசிகர்களுக்கு பிடித்தது போலவும் இருக்கும் என படக்குழு ஆசை விதைத்துள்ளது.

‘ கேங்ஸ்டா ’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல் ஓர் கெத்தான பாட்டாக இருக்கும் எனக் கூறியிருக்கிறார்கள். பாடலுக்கு இசையமைப்பாளர் ஷபிர் சுல்தான் தன் குரலைக் கொடுத்துள்ளார். வரிகளை விவேக்கா எழுதியுள்ளார். இதுவரை வந்த புகைப்படங்கள் அனைத்தும் தரமாக இருந்தது. ஏற்கனவே படக்குழு அதிக நம்பிக்கை அளித்துள்ளதாக இந்தப் பாட்டில் அஜித்குமார் இன்னும் கிளாசாக இருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த வார இறுதிக்குள் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

துணிவு படத்தில் மொத்தமாக மூன்றே பாடல்கள் எனக் கூறுகின்றனர். இந்த வெளியீட்டுக்குப் பின் அடுத்து டிரெய்லர் மற்றும் புரோமோ வீடியோக்கள் தான். புரோமோ காட்சிகள் அனைத்துப் வேற லெவலில் இருக்கும் என இயக்குனர் வினோத் நம்பிக்கை அளித்துள்ளார். ரீலீஸ் தேதி நெருங்க நெருங்க விறுவிறுப்பும் கூடிக்கொண்டே போகிறது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top