Sunday, September 15, 2024
- Advertisement -
Homeசினிமாஅப்பாடா ஒரு வழியா விட்டுட்டாங்க.. ! பல நாட்கள் கிடப்பில் கிடந்த குட் நைட் &...

அப்பாடா ஒரு வழியா விட்டுட்டாங்க.. ! பல நாட்கள் கிடப்பில் கிடந்த குட் நைட் & போர் தொழி்ல் ஓடிடி ரீலீஸ் தேதி இதோ.. !

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான பெரிய நட்சத்திரங்களின் படங்களை விட சின்ன சின்ன படங்களே அதிக வரவேற்பை பெற்றுள்ளன. அவை டாடா, அயோத்தி, குட் நைட், பிச்சைக்காரன் 2, போர் தொழில் ஆகும். இப்படங்கள் வசூல் ரீதியாகவும் நல்ல லாபத்தைப் பார்த்தது.

- Advertisement -

இதில் போர் தொழில் மற்றும் குட் நைட் ஆகிய இரண்டு படங்களின் ஓடிடி ரீலீஸ் இன்னும் ஆகவில்லை. போர் தொழில் படமாவது அண்மையில் இரு வாரங்களுக்கு முன்பு தான் வந்தது. ஆனால் குட் நைட் படம் வெளியாகி 2 மாதங்கள் ஆகியும் இன்னும் ஓடிடியில் வெளியாகவில்லை.

வாராவாரம் மக்களும் அதற்காக காத்திருந்து ஏமாற்றமடைகின்றனர். அதிகாரபூர்வமான ஓடிடி ரீலீஸ் எப்போதுவென்ற அறிவிப்பு தற்போது கிடைத்துள்ளது. தியேட்டரில் பார்க்கத் தவறியவர்கள் விரைவில் ஓடிடியில் கண்டுகளிக்கலாம்.

- Advertisement -

போர் தொழில்

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான சைக்கோ கிரைம் த்ரில்லர் திரைப்படம் போர் தொழில். சரத்குமார் – அசோக் செல்வன் காம்போ படம் முழுக்க சிறப்பாக செயல்பட்டது. இருவரும் ஒன்றாக இணைந்து பல்வேறு கொலைகளை செய்யும் சைக்கோவை பிடிப்பதே கதைக்களம். பலமான திரைக்கதை இறுதிக் காட்சி வரை பார்வையாளர்களை சீட்டின் நுனியில் அமர வைத்தது.

- Advertisement -

மற்றொரு காரணம் தரமான இசை மற்றும் சவுண்ட் எஃபெக்ட்ஸ். போர் தொழில் இன்னும் தியேட்டரில் ஓடுவதால் அங்கு சென்று அனுபவத்தைப் பெறுவது இன்னும் சிறப்பாக இருக்கும். முடியாத பட்சத்தில் வருந்தவும் வேண்டாம், அடுத்த வார வெள்ளிக்கிழமை ஜூலை 7ஆம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகிறது.

குட் நைட்

மணிகண்டன், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடிப்பில் இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் வெளியாகி ஃபீல் குட் வகையில் பார்வையாளர்களை இழுத்தத் திரைப்படம் குட் நைட். குறட்டை வியாதியை மையமாகக் கொண்டது இது. பல மாதங்களுக்குப் பின் கலகலப்பாக ஓர் நல்ல படத்தைப் பார்த்த அனுபவம் என்கின்றது மக்கள் விமர்சனம்.

தியேட்டர் மற்றும் ஓடிடி ரீலீசுக்கு இடையே நீண்ட நாட்கள் கொண்ட இந்தப் படம் இன்னும் 7 நாட்களில் அதாவது ஜூலை 3ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. வார இறுதி விடுமுறையில் குடும்பத்துடன் பார்க்க இந்த இரண்டு படங்களையும் தகுந்தவை.

Most Popular