Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாமீண்டும் இணையும் குட் நைட் கூட்டணி.. உற்சாகத்தில் ரசிகர்கள்

மீண்டும் இணையும் குட் நைட் கூட்டணி.. உற்சாகத்தில் ரசிகர்கள்

நடப்பாண்டில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சக்கை போடு  போட்ட படம் என்றால் அது குட் நைட் தான். நடிகர் மணிகண்டன் நடித்த இந்த திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஈர்த்தது.

- Advertisement -

குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ஒட்டுமொத்தமாக 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனைகளை படைத்தது. தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான திரையரங்குகளில் இந்த படம் 50 நாட்களுக்கு மேல் ஓடியது.

காமெடி, காதல் என அனைத்தும் கலந்த கலவையாக உருவான இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சென் ரெனால்ட் இசையமைத்திருந்தார்.இந்த நிலையில் குட் நைட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அதே தயாரிப்பு நிறுவனம் மணிகண்டனை வைத்து இன்னொரு படத்தை எடுக்கிறது.

- Advertisement -

இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் சென் ரெனால்ட் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிகை கௌரி பிரியா நடிக்க உள்ளார். மேலும் மண்டேலா படத்தில் வில்லனாக நடித்த கண்ணன் ரவி இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

- Advertisement -

குட் நைட் திரைப்படத்தைப் போலவே இந்த திரைப்படத்தையும் ஒரு அறிமுகம் இயக்குனர் தான் இயக்க உள்ளார். பிரபுராம் வியாஸ் என்ற இயக்குனருக்கு தான் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த படத்தின் முதல் நாள் ஷூட்டிங் சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படத்தின் சூட்டிங்கை தொடங்கி வைத்தார். குட் நைட் கொடுத்த வெற்றியை எடுத்து இந்த படத்தில் மணிகண்டன் நடிக்க இருக்கிறார்.

இது முதல் திரைப்படத்தை போலவே வெற்றி பெறும் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் சிலர் குட் நைட் படத்தில் நடித்த அதை நடிகர்கள் மற்றும் இயக்குனரை வைத்து இரண்டாவது படத்தையும் இயக்கி இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த திரைப்படம் நடப்பாண்டு இறுதியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் குட்நைட் போலவே சிறிய பட்ஜெட் படமாக தான் இருக்கும்.

Most Popular