Tuesday, December 3, 2024
- Advertisement -
Homeசினிமாஏ ஆர் ரகுமானிடம் சென்று கெஞ்ச மாட்டேன் கௌதம் வாசுதேவ் மேனன் பேட்டி

ஏ ஆர் ரகுமானிடம் சென்று கெஞ்ச மாட்டேன் கௌதம் வாசுதேவ் மேனன் பேட்டி

கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு தனியார் பேட்டியில் அவருடைய சினிமா வாழ்க்கையில் ஏ ஆர் ரகுமானுடன் இருக்கும் பழக்கத்தையும், அனுபவத்தையும் பற்றி கூறியிருக்கிறார். அந்த காணொளி தற்பொழுது இணையத்தில் பரவி வருகிறது.

- Advertisement -

இயக்குனர் ராஜு மேனன் இடம் துணை இயக்குனராக கௌதம் வாசுதேவ் மேனன் பணியாற்றிய போது ஏ ஆர் ரகுமானிடம் மின்சார கனவு ,கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற திரைப்படங்களின் பாடல்களை பெறுவதற்காக செல்லும்பொழுது தான் எனக்கு ஏ ஆர் ரகுமான் அறிமுகமானார் என்று கௌதம் வாசுதேவ் மேனன் குறிப்பிட்டிருந்தார்.

அதற்குப் பிறகு நான் முதன்முதலாக மின்னலே திரைப்படத்தை இயக்கும் பொழுது ஏ ஆர் ரகுமானை தான் அணுகினேன். ஆனால் அவர் எனக்கு நிறைய வேலை இருக்கிறது என்று இந்த படம் வேண்டாம் அடுத்த படத்தில் முயற்சிக்கிறேன் என்று கூறிவிட்டார். நானும் அவரை அதற்குப் பிறகு தொந்தரவு செய்யவில்லை .அந்த இடைப்பட்ட காலத்தில் எனக்கு ஹாரிஸ் ஜெயராஜ் உடன் நல்ல பழக்கம் ஏற்பட்டு அவருடைய காம்போவில் நான் நிறைய இசையை என் திரைப்படங்களில் வைத்திருக்கிறேன்.

- Advertisement -

நீண்ட நாட்களுக்குப் பிறகு விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் கதைகளையும், பாடல்களையும் எழுதிவிட்டு இந்த சிச்சுவேஷனில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். இந்தத் திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று கருதி அவரை மீண்டும் அணுகினேன் கதையையும் சுச்சுவேஷங்களையும் கேட்ட உடனேயே ஏ ஆர் ரகுமான் இத்திரைப்படத்தில் நானே இசையமைக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார்.

- Advertisement -

அதேபோல் எல்லா பாடல்களும் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் நல்லபடியாகவே வந்தது ஆனால் ஒரு இடத்தில் எனக்கு பாடல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் என்ன வைப்பது என்று தெரியவில்லை என்னை புரிந்து கொண்ட ஏ ஆர் ரகுமான் எனக்கே தெரியாமல் பாடலாசிரியை தாமரையை வரவழைத்து மன்னிப்பாயா என்ற பாடலை எழுதி ஸ்ரேயா கோஷலை பாட வைத்து கம்போஸ் செய்து எனக்கு சர்ப்ரைஸ் ஆக போட்டுக் காட்டினார். அப்படி உருவானது தான் அந்த பாடல் என்றும் கூறியிருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.

மேலும் இதில் சுவாரசியமான விஷயம் ஒன்று இருக்கிறது என்னவென்றால் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும் பொழுது தான் அவருக்கு ஆஸ்கார் விருதில் அவருடைய பெயர் நாமினேட் செய்யப்பட்டு இருந்தது நாளை அவர் விருதை பெற போகிறார் என்றால் நாங்கள் இன்றே அவருடைய பெயரில் ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் என்று டைட்டில் வைத்து விட்டோம் .அதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார் விருது வாங்குவதற்கு முன்பு எப்படி உங்களுக்கு தெரிந்தது என்று எங்களுக்கு தெரியும் கன்ஃபார்மாக நீங்கள் தான் இதை வாங்குவீர்கள் என்று கூறினோம்.

அதேபோல் எனக்கும் ஏ ஆர் ரகுமானுக்கான உறவில் ஒரு புரிதல் இருக்கும் நான் இயக்கிய மின்னலே, நீதானே என் பொன்வசந்தம் ,என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற திரைப்படங்களில் ஏ ஆர் ரகுமானுக்கு நான் ஒரு ஈமெயில் அனுப்பினேன் .இந்த திரைப்படத்தில் எனக்கு இசையமைத்து தர முடியுமா என்று கேட்பேன்

அதற்கு அவர் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டுவிட்டு இல்லை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இது போன்று நான் ஏதாவது திரைப்படத்தில் இசையமைக்க கேட்டு அவர் முடியாது என்று கூறிவிட்டால். நான் அவரிடம் சென்று கெஞ்ச மாட்டேன் சரி என்று விட்டுவிடுவேன் .அவர் மீது எனக்கு எந்தவித கோபமும் இருக்காது இப்படித்தான் எங்களுடைய உறவும் இருக்கிறது என்று கூறி இருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.

Most Popular