Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாசிம்புவின் அடுத்த 2 திரைப்படம்.. முக்கிய அப்டேட் வெளியானது.. ஒரே போட்டோவால் ஜாலியான ரசிகர்கள்

சிம்புவின் அடுத்த 2 திரைப்படம்.. முக்கிய அப்டேட் வெளியானது.. ஒரே போட்டோவால் ஜாலியான ரசிகர்கள்

- Advertisement -

நடிகர் சிம்பு ரசிகர்களுக்கு ஒரே நாளில் இரண்டு முக்கிய அப்டேட் வெளிவந்து மகிழ்ச்சியை தந்துள்ளது. தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்ட நடிகர்களில் ஒருவர் சிம்பு. ஒரு காலத்தில் விஜய், அஜித்துக்கு பிறகு அடுத்த இடத்தில் இருந்த நடிகர் சிம்பு பின் தொடர் தோல்வி படங்களால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். தற்போது தனது உடல் எடையை குறைத்து மாநாடு திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து கம்பேக் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சிம்பு அடுத்த படங்களுக்கான வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளார்.மாநாடு திரைப்படத்திற்குப் பிறகு அவர் நடிப்பில் வெளியாக உள்ள வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்த நிலையில் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் சிம்பு சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் டப்பிங் பணியை முடிந்து விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு காலத்தில் நடிகர் சிம்பு தனது பாத்ரூமில் டப்பிங் செய்வார் என்று தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கூறிய நிலையில், தற்போது நடிகர் சிம்பு தனது டப்பிங் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து நடிகர் சிம்புவும் , கௌதம் மேனன், ஏ. ஆர்.ரஹ்மான் ஆகியோரும் மூன்றாவது முறையாக இணைந்த படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்த நிலையில் நடிகர் சிம்பு நடித்த வரும் 10 தல திரைப்படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது . அதில் அந்தப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று கர்நாடக மாநிலத்தில் தொடங்கியுள்ளது. இதில் கௌதம் கார்த்திக் கலந்து கொண்டிருக்கிறார் .இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் பத்து தலை திரைப்படத்தில் மீண்டும் இணைந்து இருப்பது உற்சாகத்தை அளிப்பதாக கூறியுள்ளார். இதன் மூலம் ஒரே நாளில் இரண்டு திரைப்படங்களின் அப்டேட் கிடைத்துள்ளதால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Most Popular