Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாநான் சொன்னதும் மழை வந்துச்சா பாட்டுக்கு பின் இப்படி ஒரு கதை இருக்கா? விக்ரம்க்கு காஸ்ட்லி...

நான் சொன்னதும் மழை வந்துச்சா பாட்டுக்கு பின் இப்படி ஒரு கதை இருக்கா? விக்ரம்க்கு காஸ்ட்லி மிஸ்

தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவரானவர் ஜிவி பிரகாஷ் குமார்.இவர் பரத் நடித்த வெயில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழில் வெளிவந்த திரைப்படங்களில் கிரீடம், குசேலன்,ஆனந்த தாண்டவம், ஆடுகளம் இன்னும் நிறைய தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் ஜிவி பிரகாஷ் குமார்.

- Advertisement -

இதில் ஒரு சில திரைப்படங்களில் தெலுங்கு வெர்சனுக்கும் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்பொழுது ஒரு பேட்டியில் ஒரு நிகழ்வை பதிவிட்டு இருக்கிறார்.இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சிந்துபாத் என்ற திரைப்படத்தை இயக்க இருந்தார் என்றும் அந்த திரைப்படத்திற்கு கதாநாயகனாக சியான் விக்ரம் நடிக்க இருந்தார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அந்த திரைப்படத்திற்காக பாடல்களை எல்லாம் எடுக்க துவங்கி விட்டோம்.ஆனால் கடைசி சில பல காரணங்களால் திரைப்படம் நிறுத்தப்பட்டது. இதன் காரணத்தினால் இசையமைப்பு பணியும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஆனால் ஒரு பாடலை நாங்கள் எழுதி இயக்கி விட்டோம். நான் சொன்னதும் மழை வந்துச்சா என்ற பாடல் சிந்துபாத் திரைப்படத்திற்காக தான் இயக்கினோம்.

- Advertisement -

அதற்குப் பிறகு இயக்குனர் செல்வராகவன் நடிகர் தனுஷை வைத்து இயக்கிய மயக்கம் என்ன திரைப்படத்திற்கு அந்தப் பாடலை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம் என்று இப்பாடலின் வரலாற்றைக் கூறினார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.

- Advertisement -

நடிகர் சியான் விக்ரம் இதுவரை நிறைய முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றி இருக்கிறார். ஆனால் நல்ல வித்தியாசமான கதைகளை இயக்கும் இயக்குனர் செல்வராகவனின் திரைப்படத்தில் இதுவரை விக்ரம் ஏன் நடிக்கவில்லை என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

அதற்கெல்லாம் பதில் கூறும் விதமாகவும் இன்னும் இவர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் விதமாகவும் ஜி வி பிரகாஷ் கூறிய இந்த செய்தி அமைந்திருக்கிறது. ஏன் அந்த திரைப்படத்தை அவர் நடிக்காமல் போனார் திரைப்படம் ஏன் நிறுத்தப்பட்டது என்று பல கேள்விகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

இப்படி ஒரு நிகழ்வு நடக்க இருந்ததே வெளியில் தெரிவதற்கு பத்து வருடத்திற்கு மேல் ஆகி இருக்கிறது. பாடல் எல்லாம் இயக்கியும் அது அந்த அளவிற்கு வெளியில் தெரியாமல் இருந்தது ஏனென்றால் தெரியவில்லை.இதற்குப் பிறகாவது மீண்டும் இவர்களின் கூட்டணி இணைய வாய்ப்பு இருக்கிறதா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

Most Popular