Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாதல அஜித்தின் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு கொண்டாடிய கீர்த்தி சுரேஷ் & கௌதம் வாசுதேவ் மேனன்...

தல அஜித்தின் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு கொண்டாடிய கீர்த்தி சுரேஷ் & கௌதம் வாசுதேவ் மேனன் – வீடியோ இணைப்பு

கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் இவரும் நேற்று அஜித்தின் பாடலுக்கு நடனமாடியது தற்போது சமூக வலைத்தளதில் ட்ரென்டாகி வருகிறது. நேற்று சென்னையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தான் இருவரும் வைப் செய்து மகிழ்ந்தனர்.

- Advertisement -

இசையமைப்பாளர்கள் கடந்த இரு வருடங்களாக அடுத்தடுத்து உலகெங்கும் இசை நிகழ்ச்சிகள் நடியதி வருகின்றனர். சென்னையில் சென்ற இரு மாதங்களில் யுவன், ஏ.ஆர்.ரஹ்மான், விஜய் ஆண்டனி, ஹாரிஸ் ஜெயராஜ் என நால்வர் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை வைப்பில் தள்ளினர்.

மெலோடி கிங் ஹாரிஸ் ஜெயராஜின் நிகழ்ச்சியில் நேற்று பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். அதில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் கலந்து கொண்டார் என்பது எவ்வித ஆச்சர்யத்தையும் கொடுக்காது. கௌதம் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் வந்த தரமான ஆல்பங்களுக்கெனவே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

- Advertisement -

கௌதம் மேனனுடன் நடிகை கீர்த்தி சுரேஷும் சேர்ந்து நேற்று குத்தாட்டம் போட்டு கொண்டாடினர். கௌதம் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் 2015ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் படத்தின் ‘ அத்தாரு அத்தாரு ’ பாடலுக்கு இருவரும் ஆட்டம் போட்டனர். இது வைரலாகியுள்ளது.

- Advertisement -

விக்னேஷ் சிவன் எழுதிய இப்பாடலை கானா பாலா பாடினார். தரமான குத்துப் பாடலாக இன்னும் வலம் வருகிறது என்பதற்கு இவர்கள் ஆட்டம் சாட்சி. கௌதம் மேனன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் தனித்தனியாக இதற்கு முன்பு நடனமாடும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் மீம் கிரேயேட்டர்கள் நகைச்சுவையாக பயன்படுத்தினர்.

மீண்டும் ஒரு முறை அவர்களை டெம்ப்ளேட்டாக பயன்படுத்துவர் போல. அந்த அளவிற்கு குத்தாட்டம் போட்டுள்ளனர். ஏ.சே.ரஹ்மான் நிகழ்ச்சிக்குப் பின் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்ல மக்கள் சற்று அச்சப்படுகின்றனர். ஆனால் நேற்று எந்த வித அசம்பாவிதமும் இல்லாமல் அழகாக செய்தனர். சென்ற மக்களும் கொடுத்த பணத்திற்கு சந்தோசமாக கொண்டாடி வந்தனர் .

Most Popular