சினிமா

கெளதம் மேனனுடன் இணைய உள்ள விஜய் சேதுபதி.. பாலிவுட் நடிகரும் வராரு!.

நடிகர் விஜய் சேதுபதியும் பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற உள்ளனர். ஒரு காலத்தில் இளசுகளின் மனதை கட்டிப்போட்டு காதல் படங்களையும் மறுபுறம் காவல்துறை அதிகாரிகள் மீது மரியாதை கொண்டு வரும் வகையில் போலீஸ் ஸ்டோரிகளையும் எடுத்து பிரபலமானவர் கௌதம் வாசுதேவ் மேனன். எனினும் சமீபத்தில் அவர் எடுத்த படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை.

வெந்து தணிந்தது காடு படத்தில் கௌதம் மேனன் ஓரளவுக்கு தன்னுடைய பழைய டச்சை  காட்டி இருந்தார். முதலில் தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் துருவ நட்சத்திர படத்தின் இறுதி கட்டப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இந்த படம் ஜூன் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் விஜய் சேதுபதிக்காக ஒரு படத்தை எழுதி வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்த படம் மூலம் பாலிவுட்டில் கௌதம் வாசுதேவ் முதல் முறையாக காலடி எடுத்து வைக்கிறார். கௌதம் இயக்கிய காக்க காக்க திரைப்படம் போர்ஸ் என்று ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது அவரே தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் வகையில் ஒரு படத்தை எடுக்க உள்ளார். இந்த படத்தில் இரட்டை கதாநாயகர்கள் சப்ஜெக்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இதில் விஜய் சேதுபதி ,அபிஷேக் பச்சனும் இணைந்து நடிக்க உள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் நடைபெற்று வருகிறது. துருவ நட்சத்திரம் படம் முடிந்த பிறகு கௌதம் மேனன் தன்னுடைய புதிய படத்தை இயக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கௌதம் மேனன் பழைய இயக்குனராக திரும்பி வரவேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அதனை அவர் நிவர்த்தி செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top