Sunday, November 17, 2024
- Advertisement -
HomeUncategorizedதளபதி 69 படத்தை இயக்குகிறாரா கௌதம் வாசுதேவ் மேனன் ? விஜய்யின் கடைசி படம் குறித்து...

தளபதி 69 படத்தை இயக்குகிறாரா கௌதம் வாசுதேவ் மேனன் ? விஜய்யின் கடைசி படம் குறித்து பேச்சு.. !

தளபதி விஜய் இன்னும் இரண்டு படங்களுடன் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்த பிறகு அந்த கடைசிப் படத்தை யார் இயக்குவார் என்பது குறித்து பல்வேறு பெயர்கள் சமூக வலைத்தளத்தில் பரவின. ஆனால் எதுவுமே இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் கட்சித் துவங்கியுள்ள விஜய் 2026 தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் தீவிரமாக செயல்படவுள்ளார். அதன் காரணமாகவே இரண்டு படங்களுடன் விலகவில்லார். அவரின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை உண்டாக்கினாலும் வரவேற்கத்தக்க ஒன்றே.

தற்போது அவர் கோட் திரைப்படத்தில் நடித்துக் கொண்டுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகும் இத்திரைப்படம் ஷூட்டிங் பணிகளில் தான் உள்ளது. ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்த்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி புஷ்பா 2 படத்துடன் மோதவுள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் விஜய் தனது கடைசிப் படத்தை தி.வி.வி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார். எந்த இயக்குனரின் கதையை தளபதி விஜய் ஓகே செய்வார் என்பது தான் பாக்கி. கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன், டிரிவிக்ரம் என பல பெரிய இயக்குனர்கள் பெயர்கள் சமூக வலைத்தளத்தில் செய்திகளாக வருகின்றதே தவிர எதுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

- Advertisement -

இன்று இயக்குனர் கவுதம் மேனனிடம், தளபதி விஜய்யின் அரசியல் நுழைவைப் பற்றியும் அவரின் கடைசிப் படம் குறித்தும் கேட்டனர். அதற்கு அவர், “ இன்னும் சில படங்கள் நடித்தால் நன்றாக இருக்கும். தளபதி 69 படத்தை இயக்கும் வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் இயக்குவேன். ” என தன் விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.

15 வருடங்களுக்கு முன்பு விஜய்யுடன் ‘ யோகன் அத்தியாயம் ஒன்று ’ என்ற படத்தை கவுதம் மேனன் செய்யவிருந்தார். ஆனால் அது சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நடக்காமல் போனது. ஆனால் இன்னும் கவுதம் மேனன் அவரை வைத்து இயக்க ஆசையாக தான் உள்ளார். மீதம் தளபதி விஜய்யின் கையில் தான் இருக்கிறது.

Most Popular