சினிமா

” நான் வேணும்னே தான் க்ளைமேக்ஸ் இப்படி வைச்சன் ; அதுல இவங்க 2 பேருக்கும் கனெக்சன் இருக்கு ” – புதிய டுவிஸ்ட் கொடுக்கும் கவுதம் மேனன்

GVM about VTK climax

கோலிவுட் பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஆட்மேன் சிலம்பரசன் நடித்த வெந்து தணிந்தது காடு படம் செப்டம்பர் 15ஆம் தேதி உலகெங்கும் வெளியானது. கவுதம் வாசுதேவ் மேனனின் புதிய உருவம், சிம்புவின் அபார நடிப்பு மற்றும் ரஹ்மானின் துல்லியமான இசை என படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. மாநாடு படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த சிம்பு வெந்து தணிந்தது காடு வழியே ஆதிக்கத்தை செலுத்த துவங்கியுள்ளார்.

எப்போதும் காதலை மையமாக கொண்டு அல்லது காதல் கதையைச் சுற்றி ஓர் ஆக்க்ஷன் படம் எடுப்பதே கவுதம் வாசுதேவ் மேனனின் வழக்கம். சென்ற ஆண்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் போதே அனைவரும் இது கவுதம் மேனனின் புதிய முயற்சி என எண்ணினர். அதே போல் தான் படமும் அமைந்துள்ளது. ஜெயமோகனின் கதைக்கு கவுதம் மேனனும் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கினார். தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டில் விறகு வெட்டும் முத்து மும்பை சென்று தாதா ஆவது தான் கதை.

Advertisement

முதல் பாதியில் தமிழ்நாட்டில் இருந்து மும்பை சென்ற சிம்பு தெரியாமல் கொலை கும்பலில் சேர்ந்து பின்னர் அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். அந்த வேளையில் அவரின் வாழ்கை தலை கீழாக மாறுகிறது. பின்னர் இரண்டாம் பாதியில் மும்பை தாதாகளின் கவனத்தைக் கவர்ந்ததால் மேலிடத்திற்கு செல்கிறார். இரத்தம் படிந்த கையில் இருக்கும் துப்பாக்கியை கீழ போட இயலாமல் அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்லும் போது அவரது மனைவிக்கு இன்னல்கள் ஏற்ப்பட இதெல்லாம் வேண்டாம் என்று ஒதுங்குகிரார்.

அதைக் கட் செய்து உடனே இயக்குனர் ‘ 5 வருடங்கள் கழித்து ‘ என வேகமாக நகர்ந்துள்ளார். அப்போது முத்துன் எனும் சிம்பு பெரிய தாடியுடன் மிகப் பெரிய தாதாவாக வளம் வருகிறார். அதனுடன் முதல் பாகம் முடிவடைகிறது. இந்த க்ளைமாக்ஸ் காட்சி பெரும்பாலானோருக்கு பிடிக்கவில்லை. இரண்டாம் பாகம் இருக்கும் போது ஏன் இவ்வளவு அவசரமாக ஓட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

அவர்களின் கேள்விக்கு இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் கூறியதாவது, “ நான் வேண்டுமென்றே தான் அந்த க்ளைமாக்ஸ் காட்சியை வைத்தேன். படத்தில் ஶ்ரீதர் கதாபாத்திரத்தில் வரும் மலையாளத்தானுக்கும் முத்துவுக்கும் பொதுவாக இருக்கும் இணைப்பை அடுத்த பாகத்தில் காட்ட திட்டமிட்டுள்ளோம். முதல் பாகத்திற்கு சிறப்பான விமர்சனங்களை வந்தால் அடுத்த பாகத்தை நகர்த்த முடிவெடுத்துள்ளோம். இன்னும் 3 வாரங்களில் அதனைப் பற்றி கூறுகிறோம். ” என்றார்.

படத்தின் முன் க்ளைமாக்ஸ் காட்சியில் முத்து தன் கல்லூரி மலையாள நண்பன் பற்றி அழுத்தி கூறுவார். அது ஶ்ரீதராக இருக்க வாய்ப்புள்ளது. பின்னர் படம் முடிவடையும் வேளையில் அதாவது 5 வருடம் கழித்து காண்பிக்கப்படும் காட்சியில் ஶ்ரீதரை சந்திப்பார் ஆனால் இருவரும் தெரிந்துக்கொண்டே ஒன்றும் பேசாமல் நகர்ந்துவிடுவர். இந்த குழப்பங்கள் அனைத்திற்கும் இயக்குனர் சொன்னது போல் ஒரு இணைப்பு இருக்கும் எனத் தோன்றுகிறது. காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top