இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் உலகநாயகன் கமலஹாசன். இதைத்தொடர்ந்து நடிகர் பிரபாஸ் நடிக்கும் ப்ராஜெக்ட் கே என்ற திரைப்படத்தில் வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் அண்மையில் வெளிவந்தது.
இந்நிலையில் இயக்குனர் ஹச் வினோத்தின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்த திரைப்படத்தை கமலஹாசன் நடிக்கப் போவதாக தகவல் வெளியாக இருக்கிறது. அதுவும் அதிகாரப்பூர்வமான தகவலாகவே வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஹச் வினோத். அதற்குப் பிறகு தீரன் அதிகாரம் ஒன்று கார்த்திக்கை வைத்து இயக்கினார். இவையெல்லாம் ஓரளவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
கடைசியாக தல அஜித்தை வைத்து வலிமை, துணிவு ஆகிய திரைப்படங்களை இயக்கினார் இயக்குனர் ஹச் வினோத். இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைத் தான் பெற்றது. இதைத்தொடர்ந்து இயக்குனர் எச்வினோத் கமலஹாசனிடம் தன்னுடைய கதையை கூறிய போது அவருக்கு கதை பிடித்து விட்டதாக கூறப்படுகிறது.
அதன் காரணத்தினால் எச் வினோதின் திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் நடித்த ஒப்புக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு இவர் இயக்க இரண்டு திரைப்படங்களும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றதால் திரைப்படத்தின் மீது இவருக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது.
ஆனால் உடனடியாக இந்த திரைப்படத்தை இயக்குவதற்கு நடிகர் கமலஹாசன் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. விஜய் டிவியில் நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் உலகநாயகன் கமலஹாசன் ஆவார்.
இந்த ஆண்டின் பிக் பாஸ் சீசன் 7 விரைவில் தொடங்க இருக்கிறது. அதில் தொகுப்பாளராக நடிகர் கமலஹாசன் பங்கேற்க வேண்டும் என்பதால் படப்பிடிப்பு தாமதம் ஆகிறது என்று கூறப்படுகிறது.
இதன் காரணத்தினால் இயக்குனர் ஹச் வினோத் ஏற்கனவே யோகி பாபுவை வைத்து ஒரு கதையை உருவாக்கி இருக்கிறாராம். அதனால் அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கப் போகிறார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எதுவும் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.