பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 11-ம் தேதி அஜித் நடிக்கும் துணிவு திரைப்படமும் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது. இரு திரைப்படங்களுக்கும் சரிசமமான திரையரங்குகளை பிரித்து தரப்பட்டுள்ளதாக தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர்கள் ராஜு, நம்பர் ஒன் நம்பர் ஒன் என்று கூறி அஜித் ரசிகர்களை வம்பு இழுத்தார்.
வாரிசு திரைப்படம் மெகா ஹிட் ஆகும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். தில்ராஜ்வின் இந்த பேச்சு அஜித் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி தரும் விதமாக துணிவு படத்தின் இயக்குனர் ஹச் வினோத் கூறியிருக்கிறார். பேட்டி ஒன்றில் பேசிய ஹெச்.வினோத், பொங்களுக்கு இரண்டு படங்களுமே வெற்றி பெற வேண்டும். இரண்டு தயாரிப்பாளர்களுமே நல்ல வசூலை பெற வேண்டும்.
அஜித் விஜய் என இரு நடிகர்களின் ரசிகர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். இதில் போட்டி எதுவும் இல்லை. துணிவு திரைப்படம் பொங்கலுக்கு போட்டியிடுவது குறித்து நடிகர் அஜித்துக்கு எவ்வித பங்கும் ஈகோவும் இல்லை என்றும் ஹச் வினோத் கூறியுள்ளார் .
மேலும் ரசிகர்கள் சினிமாவுக்கு அதிக முக்கியத்துவமும் ,அதிக நேரத்தையும் செலவிட வேண்டாம் என்றும் பிடிக்கும் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்தாலும் சரி இல்லை ஓடிடி யில் பார்த்தாலும் சரி பார்த்துவிட்டு அப்படியே கடந்து செல்லுங்கள் என்றும் அறிவுரை வழங்கி இருக்கிறார்.
தில் ராஜு தன்னுடைய படத்தை வெற்றி பெற வேண்டும் என்று பேசிய நிலையில் வினோத் இரண்டு படமும் வெல்ல வேண்டும் என கூறியிருப்பது அனைத்து தரப்பு ரசிகர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இரண்டு நடிகர்களின் திரைப்படத்திற்கான புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எனினும் வியாழக்கிழமை விடுமுறை நாள் இல்லை என்பதால் பெரிய நகரங்களை தவிர மற்ற ஊர்களில் படத்தின் வசூல் சரிய வாய்ப்புள்ளதாக திரைத்துறை நிபுணர்கள் கூறியுள்ளனர்.