சினிமா

மஹான் படத்தில் வரும் ‘ நான் நான் ’ பாடலின் இசை சிறப்பாக வந்ததற்கு அஜித் சார் தான் காரணம் – சந்தோஷ் நாராயணன் பதிவு.. !

Ajithkumar Santhosh Narayanan

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் சென்ற ஆண்டு ‌ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் மஹான். விக்ரமுக்கு சென்ற 5 ஆண்டுகளில் கிடைத்த ஒரே நல்ல படம் இதுதான் (பொன்னியின் செல்வனுக்கு முன்). மஹான் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார்.

ஆல்பம் சூப்பர் டூப்பர் ஹிட். சூரயாட்டம், எவண்டா எனக்கு கஸ்டடி, ரிச் ரிச் என அனைத்து பாடல்களும் தரமாக இருக்கும், குறிப்பாக நான் நான் ! பட வெளியீட்டுக்கு முன் வந்த ‘ நான் நான் ’ லிரிக்கள் வீடியோ நடிகர் விக்ரமுக்கு சமர்ப்பணம் அளிக்கும் வகையில் செதுக்கப்பட்டு இருந்தது. படத்தின் தீம் மியூசிக்கும் இதுதான். அதைக் கேட்கையில் உள்ளுக்குள் ஓர் புதிய புத்துணர்ச்சி கிடைத்தது போல இருக்கும்.

Advertisement

இப்பாடல் வெளியாகி ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் சிலர் இதை லூப்பில் போட்டு கேட்டுக்கொண்டு இருக்கின்றனர். டிவிட்டரில் ரசிகர் ஒருவர் சந்தோஷ் நாராயணனிடம், “ இந்தப் பாடலுக்கு இசையமைக்கும் போது எந்த போதை மருந்தை உட்கொண்டீர்கள் ” என உற்சாகத்தில் கேட்டார்.

அதற்கு சந்தோஷ் நாராயணன் மங்காத்தா படத்தில் அஜித் அறிமுக புகைப்படத்தை பதிவிட்டு, “ ஹா ஹா போதை மருந்துலாம் இல்லை. மங்காத்தா அஜித் என்ட்ரி காட்சியை லூப்பில் போட்டுக் கொண்டேன் அவ்வளவு தான். ” என பதிவிட்டிருந்தார். அவரின் இந்த டுவீட்டை அஜித் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

Advertisement

ஏற்கனவே மகிழ் திருமேனி இயக்கவிருக்கும் அஜித் 62 படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் என சில தகவல்கள் வெளியாகியது. இன்று சந்தோஷ் நாராயணன் இப்படி பதிவிட இதை ஓர் குறிப்பாக எடுத்துக் கொண்டுள்ளனர். அஜித் 62 படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணியாற்ற அதிக வாய்ப்புகள் உள்ளன. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். சென்ற வாரமே படத்தின் பூஜை வேலைகள் முடிந்த நிலையில் படத்தின் ஷூட்டிங் இம்மாத இறுதியில் துவங்கவிருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top