Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமாரஜினியின் ஜெய்லருக்கு அடிச்ச லக்..! பெரிய படம் விலகியதால் உற்சாகம்

ரஜினியின் ஜெய்லருக்கு அடிச்ச லக்..! பெரிய படம் விலகியதால் உற்சாகம்

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகர் என்ற நாற்காலியை தற்போது ரஜினிகாந்த் இழந்துவிட்டார். இந்த நாற்காலி தற்போது விஜய், கமல், அஜித் இடையே இருக்கிறது. இந்த நாற்காலியை மீண்டும் தக்க வைப்பதற்காக தான் நடிகர் ரஜினிகாந்த் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார்.

- Advertisement -

நம்பர் ஒன் நடிகர் என்று பெயர் வாங்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டை தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஹிந்தி வெளிநாடு என அனைத்து இடங்களிலும் படம் வசூலை பெற வேண்டும்.

இதற்காகத்தான் நடிகர் ரஜினி ஒரு ஐடியாவை தேர்வு செய்தார். அதன்படி ஒவ்வொரு மொழியில் உள்ள சூப்பர் ஸ்டாரையும் சேர்த்து நடிகர் ரஜினி தன்னுடைய படத்தில் நடிக்க வைத்தார். மோகன்லால், சிவக்குமார் ,சுனில் ஜாக்கிஷரப் போன்ற நடிகர்கள் ஜெய்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் ஹிந்தியில் தற்போது பிரபலமாக இருக்கும் தமன்னாவும் இந்த படத்தில் நடிக்கிறார். இதன் காரணமாக ஜெயிலர் படத்திற்கு ஒரு பேன் இந்தியா அளவிலான மார்க்கெட் உருவாகி இருக்கிறது. எனினும் ஜெய்லர் படத்திற்கு போட்டியாக ஆகஸ்ட் 15ஆம் தேதி ரன்பீர் கபூர் நடித்த அனிமல் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆக இருந்தது.

- Advertisement -

அனிமல் திரைப்படத்தை அர்ஜுன் ரெட்டி இயக்குனர் இயக்கி இருக்கிறார். இதனால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ரன்பீர் கபூருக்கும் அனைத்து மொழிகளிலும் நல்ல ரசிகர்கள் இருக்கிறார்கள். முக்கியமாக ஹிந்தியில் ஜெயிலரும் அணிமலும் மோதி இருந்தால் ஜெய்லருக்கு கடும் சேதம் உண்டாகி இருக்கும்.

இதனை தவிர்க்க தான் ஜெயிலர் படத்தை ஆகஸ்ட் 10ஆம் தேதியே ரிலீஸ் செய்ய பட குழு முடிவு எடுத்திருந்தது. இந்த நிலையில் அனிமல் திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இன்னும் முடிவடையவில்லை. இதனால் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதத்திற்கு அனிமல் திரைப்படத்தை அதன் தயாரிப்பாளர்கள் தள்ளி வைத்திருக்கிறார்கள்.

இதன் காரணமாக அந்த வாரத்தில் இந்தியா முழுவதும் பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இது ஜெயிலருக்கு கூடுதல் நன்மையாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஜெயலலிதா திரைப்படம் 300 முதல் 400 கோடி ரூபாய் வசூலை பெரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்து விடலாம் என ரஜினி மகிழ்ச்சியில் இருக்கிறார்.

ஆனால் படம் நன்றாக இருந்தால் மட்டுமே இந்த நிலை ஏற்படும். மேலும் தமிழ்நாட்டில் ஜெயிலர் திரைப்படம் 200 கோடி மேல் வசூல் செய்ய வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular