சினிமா

மெல்லிசை மன்னன் ஹாரிஸ் ஜெயராஜ் கம்பேக் ; மீண்டும் இணையும் தனி ஒருவன் ஜோடி

Jayam Ravi Nayanthara and Harris Jayaraj

நடிகர் ஜெயம் ரவியின் திரைப்பட வாழ்க்கையில் மிகப்பெரிய சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் தனி ஒருவன். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். ஜெயம் ரவி , நயன்தாரா ஜோடி இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது. இந்த நிலையில் சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது . இயக்குனர் அகமத் இந்தத் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தில் இசை பேசும் பொருளாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு காரணம் பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்தில் பணியாற்றுகிறார். என்றென்றும் புன்னகை திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் அகமதுடன் ஹாரிஸ் ஜெயராஜ் கைகோர்த்துள்ளார் . ஹாரிஸ் ஜெயராஜ் கேரியரில் வேட்டையாடு விளையாடு திரைப்படம் மிகப்பெரிய சூப்பர் ஹிட் ஆனது. தற்போது அகமது இயக்கி வரும் இந்த படத்தின் இசையும் அதே தரத்தில் இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா தனது திருமணத்திற்கு பிறகு தற்போது ஜெயம் ரவியுடன் பெயரிடாத இந்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் ஷெட்யூல் பாண்டிச்சேரியில் முடிந்துள்ளது.

Advertisement

ஆக்சன், அதிரடி மற்றும் காதல் செண்டிமெண்ட் நிறைந்த திரைப்படம் ஆக இது இருக்கும் என இயக்குனர் அகமத் தெரிவித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை இந்த படத்திற்கு மேலும் வலு சேர்க்கும் என அவர் கூறியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் பொறுத்தவரையில் இனி ஆண்டுக்கு மூன்று படங்கள் தான் பணியாற்றுவேன் என்று அண்மையில் கூறியிருந்தார் . அதேபோல் 2019 ஆம் ஆண்டு வெளியான தேவ், காப்பான் திரைப்படத்திற்கு பிறகு அவர் எந்த படத்திலும் பணியாற்ற வில்லை. இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர் .

தற்போது வெளியாக இருக்கும் தி லெஜெண்ட் திரைப்படத்தின் இசை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . தி லெஜெண்ட் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பழைய ஹாரிஸ் ஜெயராஜ் இசையை கேட்பது போல் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். தற்போது ஹாரிஸ் ஜெயராஜ் துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கும் ஜெயம் ரவியின் பெயரிடாத திரைப்படத்திற்கும் இசையமைக்கும் பணியில் தீவிரமாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top