தமிழ் திரையுலகில் பிரபல நடிகரும் இயக்குனருமானவர், தயாரிப்பு துறையிலும் வெற்றி பெற்றவரான இயக்குனர் மனோபாலா நேற்று உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இவரின் பூதவுடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. விஜய் ,சூர்யா ,ஆர்யா ,சூரி ,விஜய் சேதுபதி மற்றும் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். இவர்களோடு சிறந்த குணச்சித்திர நடிகரான எம்.எஸ் பாஸ்கர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மனோபாலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் எம்.எஸ் பாஸ்கர் அவர் குறித்து பேசும்போது ” மனோபாலா எல்லா திரைப்படங்களையும் பார்த்து விடுவார். இவருக்கு யார் அழைப்பு கொடுத்தாலும் அந்த நிகழ்ச்சியில் கட்டாயம் கலந்து கொள்வார். எந்த பாகுபாடும் பார்க்க மாட்டார். நண்பர்கள் ,உறவினர்கள் என்று அனைவர் வீட்டிலும் நல்லது, கெட்டது என்ற அனைத்து நிகழ்ச்சிகளும் தவறாமல் கலந்து கொண்டு விடுவார் ” என்று பேசியிருந்தார்.
மேலும் அவர் பேசும்போது ” நாங்கள் இருவரும் கடைசியாக கடாரம் திரைப்படத்தின் படபடப்பு தளத்தில் சந்தித்து பேசினோம். அப்போது அவர் ஒரு சில பிரச்சனைகளை சொல்லி மிகவும் வருத்தப்பட்டார். நெருங்கியவர்களிடம் மட்டுமே தன்னுடைய பிரச்சனைகளை கூறும் மனோபாலா அன்று என்னிடம் பேசியது எனக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாக இருந்தது.மேலும் அவர் அடுத்தவர்களுக்காக ஆறுதல் சொல்லியும் அதிகம் பழக்கப்பட்டவர் இன்று இறந்துவிட்டார்.இந்த இழப்பு எனக்கு மிகப் பெரிய இழப்பாக அமைந்து உள்ளது ” என்று பேசியிருந்தார்.
69 வயதான இயக்குனர் மனோபாலா நேற்று உயிரிழந்தார். இவர் கல்லீரல் சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் மனோபாலா மற்றும் நடிகர்கள் விவேக் ,மயில்சாமி இணைந்து நடித்தால் அந்த அந்த இடத்தில் காமெடி களைகட்டும் என்று அந்த கூட்டணிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது குறிப்பிடத்தக்கது. சில மாதங்களுக்கு முன்பு மயில்சாமி மரணத்திருந்தார் கடந்த ஆண்டு விவேக் என்பது மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.