இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிப்பு அசுரர்கள் பலர் இணைந்து உருவாக்கிய மற்றும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் பாகம் 1 நேற்று வெளியானது. படத்திற்கு அமோக வரவேற்பும் கிடைத்தது. ஒரு பக்கம் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி மூவரும் அதிரடி காட்ட மறுபக்கம் ஐஷ்வர்யா ராய் மற்றும் திரிஷா பார்வையாளர்களை அழகில் மயக்கினர். விமர்சன ரீதியாக வெற்றி பெறும் திரைப்படம் நிச்சயம் வசூல் ரீதியாகவும் மாபெரும் லாபத்தை ஈட்டும். அதில் பொன்னியின் செல்வன் அடங்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
ஆன்லைனில் டிக்கெட்டுகள் நினைத்ததை விட வேகமாகவும் அதிகமாகவும் விற்பனையானது. பல தியேட்டர்களில் எளிதில் முதல் மூன்று நாட்கள் ஹவுஸ்புல் ஆகிவிட்டது. விடுமறை நாட்கள் என்பதால் நிச்சயம் இன்னும் 1 வாரத்திற்கு டிக்கட்டுக்கு டிமாண்ட் தான்.
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் தற்போது வந்துள்ளது. உலகெங்கும் ரிலீஸ் ஆன இந்த படம் வசூலில் சாதனைகள் படைத்துள்ளது. தமிழ்நாட்டில் முதல் நாள் மட்டுமே 26.8 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. உலகெங்கும் செய்த வசூல் பட்டியல் இதோ.
தமிழ்நாடு – 26.8 கோடி
ஆந்திரா – 5.5 கோடி
கேரளா – 3.2 கோடி
கர்நாடகா – 5.11 கோடி
மற்ற அனைத்து மாநிலங்கள் சேர்த்து – 3 கோடி
வெளிநாடுகள் அனைத்தும் சேர்த்து – 40.81 கோடி
மொத்தமாக உலகம் முழுவதும் முதல் நாள் 84.42 கோடிகள் ஈன்றபட்டுள்ளது. 2.2 கோடிகள் பெற்று UKவில் முதல் நாள் அதிகம் வசூல் செய்த படமாக பொன்னியின் செல்வன் முன்னேறியுள்ளது. உலகம் முழுக்க முதல் நாள் அதிக வசூல் செய்த வரிசையில் 2.0, கபாலியைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் இடம்பெற்றுள்ளது. 2022ஆம் ஆண்டு வெளியான படங்களில் வலிமை மற்றும் பீஸ்டுக்கு அடுத்து பொன்னியின் செல்வன் உள்ளது. இந்த வசூல் செய்திகள் அனைத்தும் முதல் நாள் கணக்கெடுப்பு மட்டுமே.