Monday, April 29, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஇந்த வார ஓடிடி ரீலீஸ் : லால் சலாம், லவ்வர், பிரம்மயுகம் என ஒரே நேரத்தில்...

இந்த வார ஓடிடி ரீலீஸ் : லால் சலாம், லவ்வர், பிரம்மயுகம் என ஒரே நேரத்தில் வெளியாகும் 5 தரமான படங்கள்

2024ல் கடந்த மாதம் வெளியான சில தரமான படங்கள் இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தமிழ் மற்றும் மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடி அனைவரது கவனத்தையும் ஈர்த்த படங்களும் இந்த வார ஓடிடி ரீலீஸ் பட்டியலில் உள்ளது.

- Advertisement -

சந்தானம், மேகா ஆகாஷ், லொள்ளு சபா சேசு, நிழல்கள் ரவி, ஜான் விஜய், மொட்ட ராஜேந்திரன், ரவி மரியா, லொள்ளு சபா மாறன், பக்கோடா பாண்டி என காமெடியர்கள் சூழ கலகலப்பான காமெடி படமாக உருவாகியது வடக்குபட்டி ராமசாமி. கடவுள் பெயரை வைத்து மக்களை ஏமாற்றும் ஹீரோ ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்ள, அதில் இருந்து எப்படி திருந்தி வெளியே வரார் என்பதை நகைச்சுவையாக எடுத்துள்ளனர். பல மாதங்கள் கழித்து நல்ல காமெடிகள் கொண்ட படமாக இது அமைந்துள்ளது. மார்ச் 12 அமேசான் தளத்தில் வெளியாகியுள்ளது.

ரஜினியின் மகள் ஐஷ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் கவுரவ தோற்றத்தில் வர விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா, செந்தில், நிரோஷா உள்ளிட்டோர் நடித்தத் திரைப்படம் லால் சலாம். ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமையைப் போற்றும் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் தியேட்டரில் தோல்வியைத் தழுவியது. மார்ச் 15ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் இப்படம் ஓடிடியிலாவது வரவேற்பை பெறுகிறதா எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

- Advertisement -

அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், கவுரி பிரியா ரெடி இருவரின் மிகச் சிறப்பான நடிப்பில் வெளியானப் படம் லவ்வர். நடைமுறைக் காதலில் இருக்கும் சிக்கல்களையும், காதலில் ஆணாதிக்கம் எந்த அளவு காதலை சரிக்கும் என்பதைத் தெளிவாக எடுததுரைக்கிறது. இப்படம் மார்ச் 15ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

- Advertisement -

மலையாளத்தில் கடந்த மாதம் வெளியான தரமான மூன்று படங்களில் ஒன்று தான் பிரம்மயுகம். 72 வயதில் மம்முட்டியின் அசத்தலான நடிப்பில் வெளியான பிளாக் & ஒயிட் படம் இது. வசூலில் 75 கோடிக்கு மேல் அள்ளி நல்ல விமர்சனங்களையும் பெற்றது. இப்படம் தமிழ், தெலுங்கு என 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. மார்ச் 15ஆம் தேதி சோனி லைவ் தளத்தில் வெளியாகிறது.

ஜனவரி மாதம் பொங்கலின் போது வெளியாகி மிகச் சிறந்த விமர்சனங்களைப் பெற்றத் திரைப்படம் ஆட்டம். 2023ல் பல்வேறு திரை நிகழ்ச்சிகளில் சிறந்தத் திரைப்பட விருதை வென்றுள்ளது. நாடக குழுவில் இருக்கும் ஒரே பெண்ணிடம் 12 ஆண்களில் யாரோ ஒருவர் தவறாக நடந்துக் கொண்டார். அதனைக் கண்டுபிடிக்கும் போக்கில் தான் படம். பொதுவாக 4 வாரங்களில் ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு மத்தியில் இத்திரைப்படம் பல வாரங்கள் கிடப்பில் இருந்தது. இறுதியாக நேற்று அமேசான் பிரைமில் வெளியானது.

Most Popular