கமல் ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் 2001ஆம் ஆண்டு உருவான இந்தியன் திரைப்படம் இருவரது சினிமா வாழ்க்கையிலும் மிகப் பெரிய பங்களிப்பைக் கொண்டது. இந்தப் படத்தின் இறுதியில் இந்தியன் தாத்தா சாகாதாவாரு காட்டப்பட்டு இருக்கும். அர்த்தம் இரண்டாம் பாகம் வருவதற்கான குறிப்பு. 20 ஆண்டுகள் ஆகியும் அதனை பற்றிய இன்னும் எந்த ஒரு அறிகுறியும் இல்லை.
3 வருடங்களுக்கு முன்பு இந்தியன் 2 போஸ்ட்டரை வெளியிட்டு மக்களின் எதிர்பார்ப்பை கூட்டினார் இயக்குனர் ஷங்கர். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் படப்பிடிப்பும் துவங்கியது ஆனால் சில அசம்பாவிதங்களால் படம் நிறுத்தப்பட்டு கோர்ட் கேஸில் அலைந்தது படக்குழு. பின்னர் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் உதவியால் அனைத்தும் சரி செய்யபட்டு தற்போது நல்ல விதமாக ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது.
இயக்குனர் ஷங்கர் ஒரே சமயத்தில் இந்தியன் 2 மற்றும் ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தை இயக்கி வருகிறார். இங்கு வேலை செய்துவிட்டு ஓய்வ்வே எடுக்காமல் அடுத்தப் படத்தின் ஷூட்டிங்கை தொடர்கிறார். அதனை நாம் அவரது சமூக வலைதள பக்கங்களில் காணலாம். இரு படங்களையும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க வேண்டுமென்ற எண்ணமே அவரை இவ்வளவு விரைவாக பணிபுரிய வைக்கிறது.
கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு 70% நிறைவுப் பெற்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இன்னும் வெளிநாட்டு காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான ஓர் கிளைமாக்ஸ் ஃபைட் காட்சி மட்டுமே எஞ்சி இருப்பதாகவும் கூறினர். கடந்த சில வாரங்களாக நாம் இந்தியன் 2 படக்குழு தென்னாபிரிக்காவில் ஷூட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ஏன் தென்னாபிரிக்காவை தேர்ந்தெடுத்தனர் என்பதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. எந்த அளவிற்கு பிரம்மாண்ட இருக்கிறதே அதே அளவு தத்ரூபமான படத்தைக் காட்ட வேண்டும் என்பதில் குறியாக இருப்பார் இயக்குனர் ஷங்கர். தென்னாபிரிக்கா நாட்டின் தலைநகரமான நமீபியாவில் இடம்பெற்றுள்ள வின்தோயக் ரயில்வே நிலையத்தில் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருக்கிறது.
அந்த ரயில்வே நிலையம் 1912இல் கட்டப்பட்ட அதே வாசதை இன்றும் கொண்டுள்ளது. செட் அனைத்து போலியான இடத்தைக் காட்டாமல் கூடுதலாக செலவு செய்து படக்குழு அந்த இடத்தை சில தினங்களுக்கு வாங்கி படப்பிடிப்பை மேற்கொண்டு வருகிறது. இறுதியாக படத்தில் இந்தக் காற்சி அனைத்தும் நன்றாகப் பேசப்பட வேண்டும் என்ற குறிக்கோளில் வேலை செய்து வருகிறார்.
கமல் ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், விவேக், சமுத்திரகனி, பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம் மற்றும் சிலர் எனும் பிரம்மாண்ட படையை தலைமை தாங்கி வருகிறார். விரைவில் ஷூட்டிங் பணிகள் நிறைவுற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை படக்குழு துவங்கவுள்ளது. அடுத்த ஆண்டு கோடைக்குள் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். பொங்கல் பண்டிகையை குறிவைக்கின்றனர்.