சினிமா

தெலுங்கு சூப்பர்ஸ்டாரை இயக்கவுள்ளாரா லோகேஷ் கனகராஜ் ? உண்மை இதுதான்

Lokesh Kanagaraj

மாநகரம் திரைப்படம் மூலம் தமிழ் சினமாவுக்குள் நுழைந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய 3வது படத்திலேயே இளையதளபதி விஜயையும் அடுத்த படத்தில் உலக நாயகன் கமல் ஹாசனையும் வைத்து இயக்கியுள்ளார். எந்த ஒரு இயக்குனர்களுக்கும் துணையாக பணிபுரியாமல் தன் கடும் உழைப்பால் மிக குறுகிய காலத்தில் பெரிய உயரத்திற்கு செல்வது சாமான்ய விஷயம் அல்ல. ரசிகர்களால் கொண்டாப்பட்டு இவ்வளவு பெரிய இடத்திற்குச் சேன்றப் பின்பும் எந்த ஒரு தலைகணம் இல்லாமல் இருப்பது இவரது பெருந்தன்மை.

சென்ற மாதம் வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய லாபத்தைப் பெற்றுள்ளது. கமல் ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி என மூன்று பெரும் நடிகர்கள் படம் முழுவதும் அதிரடிக் காட்ட, இறுதியில் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் வந்து மாஸ் காட்ட அனைத்து வகை ரசிகர்கள் மத்தியிலும் பெரும் ஆதரவைப் பெற்று இன்று வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தன்னுடைய ஆசான் கமல் ஹாசனை வைத்து மாபெரும் வெற்றிபடத்தைப் கொடுத்தப் பின் தற்போது தெலுங்கு சினிமாவுக்குள் நுழைய உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

Advertisement

விக்ரம் படத்திற்குப் பின்னர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் விஜய்யுடன் தளபதி 67 படத்திற்காக இணைவதாக அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதுப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வரவில்லை. இருப்பினும் கமல் ஹாசன் மற்றும் லோகேஷ் இருவரும் மேடைப் பேச்சு ஒன்றில் மறைமுகமாக இதைப் பற்றி கூறிவிட்டனர். அந்த அறிவிப்பிற்காக விஜய் ரசிகர்கள் ஆவலாய்க் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு அவர்கள் விக்ரம் திரைப்படத்தைப் பார்த்தப்பின் வெகுவாகப் பாராட்டியுள்ளார். “ உலகநாயகன் கமல்ஹாசனின் நடிப்பைப் பற்றி பேச எனக்கு தகுதியில்லை. நான் அவருடைய மிகப் பெரிய ரசிகன் என்பதைக் கூறுவதில் பெருமைக் கொள்கிறேன். மேலும் பகத் பாசில், விஜய் சேதுபதி சிறப்பாக நடித்துள்ளனர். அனிருத் இசையில் மிரட்டியுள்ளார். ” என்றார் மகேஷ் பாபு.

Advertisement

அது மட்டுமில்லாமல், லோகேஷ் கனகராஜைப் பற்றியும் பாராட்டிப் பேசியுள்ளார் அவர், “ லோகேஷ் கனகராஜை நேரில் சந்தித்து இந்தப் படத்தை உருவாக்கியது குறித்து பேச விரும்புகிறேன். ” என்றார். அதற்கு இயக்குனர் லோகேஷ் அவர்கள், “ மிகவும் நன்றி சார். நானும் உங்களை விரைவில் உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். ” என்று ரிப்ளை செய்துள்ளார். மே மாதம் லோகேஷ் கனகராஜ் அவர்கள் மகேஷ் பாபுவை விக்ரம் திரைப்படத்தின் புரோமாசனுக்கா நேரில் சந்தித்தார்.

அரை மணி நேரம் அவருடன் பேசியப் பின் கிளம்பகயுள்ளார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ், நடிகர் ராம் சரணை வைத்து இயக்கவுள்ளதாக செய்திகள் வந்தன. தற்போது மகேஷ் பாபுக்கு இப்படி ரிப்ளை செய்துள்ளதால் ரசிகர்கள் அனைவரும் இந்தக் கூட்டணி எப்போது வரும் என்று சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்து வருகின்றனர். ஆனால் இது குறித்து லோகேஷ் கனகராஜோ அல்லது மகேஷ் பாபுவோ எதும் கூறவில்லை.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top