சினிமா

9 ஆண்டுகளுக்கு பின் சீனு ராமசாமியின் இடம் பொருள் ஏவல் ரிலீஸ் ! தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் !

Seenu Ramasamy Idam Porul Eval

தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி தர்மதுரை, நீர்ப்பறவை, தென்மேற்கு பருவக்காற்று, மாமனிதன் போன்ற அருமையான படங்களை அளித்து தமிழ் சினிமா ரசிகர்களின் அன்பைப் பெற்றுள்ளார். அவரது படங்கள் அனைத்தும் வாழ்கை கருத்துக்களைக் கொண்ட குடும்பக் கதையாகவே இருக்கும். அவரின் படங்களுக்கு இதுவரை பார்வையாளர்கள் நல்ல வரவேற்பையே தந்துள்ளனர்.

இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் சரியாக 9 ஆண்டுகளுக்கு முன் இடம் பொருள் ஏவல் என்ற படத்தை இயக்கினார் சீனு ராமசாமி. படத்தின் கதை சாகித்ய அகாடமி விருது வென்ற ராமகிருஷ்ணன் அவர்களுடையது. விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் நந்திதா ஸ்வேதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிறப்பிதுள்ளனர்.

Advertisement

2013ஆம் ஆண்டு ஆரம்பித்த படம் ஒரு வருடத்திற்குள் முடிக்கப்பட்டு ரிலீசுக்கு காத்திருந்தது. எதிர்பார்த்த படி 2014ஆம் ஆண்டு வெளியாகவில்லை. தயாரிப்பாளரின் நிதி பிரச்சினையால் படத்தின் வெளியீடு தள்ளிப் கொண்டே போனது. பின்னர் மே 2018ஆம் ஆண்டு வெளியிட எண்ணி அதுவும் தோல்வியில் முடிந்தது. ஊரடங்குக்கு பின்னர் நிச்சயம் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது தான் அவர்களுக்கு விடிவு காலம் கிடைத்துள்ளது.

படத்தின் தடையை நீக்கி திரையரங்குகளில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பல ஆண்டுகளாக படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் இடத்தில் சந்தோஷம். படத்தின் தடையை நீக்கி திரையரங்குகளில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பல ஆண்டுகளாக படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் இடத்தில் சந்தோஷம். இடம் பொருள் ஏவல் படத்தின் பாடல்கள் ஏற்கக்னாவே வெளியாகி அபார வரவேற்பை பெற்றது.

Advertisement

குறிப்பாக ‘ அத்துவான காட்டுக்கு ‘ ரசிகர்களின் விருப்பமான பாடலாக இருக்கிறது. முதல் முறையாக கவிப்பேரரசர் வைரமுத்து எழுதிய வரிகளுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். முதற் கைகோர்ப்பே மென்மையான தரமான பாடல்களை தந்துள்ளது.

அடுத்ததாக தயாரிப்பு நிறுவனம் போஸ்ட் புரொடக்ஷன் புரொமோஷன் வேளைகளில் ஈடுபடவுள்ளது. இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டின் முதல் இரண்டு மாதத்திற்குள் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top