Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாதமிழ் சினிமாவின் சூப்பர் ஹீரோ திரைப்படம் வீரன் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?

தமிழ் சினிமாவின் சூப்பர் ஹீரோ திரைப்படம் வீரன் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ திரைப்படமாக வெளிவந்திருக்கிறது வீரன். இது மின்னல் முரளி என்ற மலையாள திரைப்படத்தின் ரீமேக் ஆக இருக்கலாம் என பலரும் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

ஆனால் இந்த படத்திற்கும் மின்னல் முரளிக்கும் தொடர்பு இல்லை என்று இரு படங்களில் இயக்குனரும் வீடியோ ஒன்று மூலம் விளக்கம் அளித்துள்ளனர். வீரன் திரைப்படத்தின் டிரைலர் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை.

- Advertisement -

இதனால் படத்திற்கான முன்பதிவு பெரிய அளவில் நடைபெறவில்லை. இந்த நிலையில் இன்று திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இது குறித்து பலரும் ட்விட்டரில் விமர்சனம் செய்திருக்கிறார்கள். அது என்னவென்று தற்போது பார்ப்போம்.

- Advertisement -

மரகத நாணயம் இயக்கிய ஏ ஆர் கே சரவணன் இந்தப் படத்தையும் எடுத்துள்ளார். ஆனால் மரகத நாணயம் போல் இந்த படம் ரசிகர்களிடம் எந்த சிரிப்பையும் ஏற்படுத்தவில்லை. காமெடி காட்சிகள் எல்லாம் மிகவும் சாதாரணமாக இருக்கிறது.

படத்தின் காட்சிகளும் விறுவிறுப்பாக இல்லை. கதையும் பழைய காலத்து கதையாக இருப்பதால் எந்த ஒரு சுவாரசியத்தில் மத்தியில் ஏற்படுத்தவில்லை. மேலும் வீரன் திரைப்படத்தின் சில காட்சிகள் அங்கே அங்கே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. ஹிப் ஆப் ஆதி நடிப்பும் முதிர்ச்சி அடைந்திருக்கிறது.

ஆனால் படம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால் இந்த படம் இன்னும் நன்றாக வந்திருக்க வேண்டும். ஆனால் பல காட்சிகள் வீரன் திரைப்படம் மிகப்பெரிய ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Most Popular