Tuesday, March 19, 2024
- Advertisement -
Homeசினிமாஹாலிவுட்டை மிஞ்சும் இந்தியன் 2 ரயில் சண்டை..! பிரத்யேக தகவல்

ஹாலிவுட்டை மிஞ்சும் இந்தியன் 2 ரயில் சண்டை..! பிரத்யேக தகவல்

- Advertisement -

விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் படம் தான் இந்தியன் 2. இந்தப் படம் சிறிது கால இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தியன் 2 படத்தை பொங்களுக்கும், தல 62 திரைப்படத்தை நடப்பாண்டு தீபாவளிக்கும் வெளியிட லைக்கா நிறுவனம் முடிவு எடுத்தது.

ஆனால் தல அஜித் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு இருக்கிறது. நடிகர் அஜித் தற்போது வெளிநாட்டில் இன்பச் சுற்றுலாவில் இருப்பதால் அவர் வந்த பிறகுதான் படப்பிடிப்பு தொடங்கும். இதனால் தல 62 அடுத்த பொங்கலுக்கு தான் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதனால் இந்தியன் 2 படத்தை தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய பட குழு முடிவு எடுத்துள்ளது. இதற்காக தீவிர சூட்டிங் நடைபெற்று வருகிறது. இயக்குனர் சங்கர் திரைப்படத்தில் எப்போதுமே ஹாலிவுட் தரத்திற்கு சண்டைக் காட்சிகள் இருக்கும். குறிப்பாக அவர் எடுத்த அன்னியன் படத்தில் மேட்ரிக்ஸ் சண்டைக்கு இணையாக ஒரு சண்டை காட்சி இடம் பெற்றிருக்கும்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் ஹாலிவுட் சவால் அளிக்கும் விதமாக ஒரு சண்டைக் காட்சியை எடுக்க இருக்கிறார்கள். அதாவது ரயிலில் கமல்ஹாசன் எதிரிகளை துவம்சம் செய்வது போன்ற காட்சிகள் அதிநட்ப கேமரா தொழில்நுட்பத்துடன் எடுக்கப்படுகிறது. இதில் பல சவாலான சண்டை காட்சிகளும், கேமரா தொழில்நுட்பங்களும் இருப்பதால் இயக்குனர் சங்கர் கடும் மெனக்கிடு எடுத்திருக்கிறார்.

இந்த சண்டை காட்சிகள் தென்னாப்பிரிக்காவில் ஒரு வாரம் நடைபெற உள்ளது. இது முடிந்தவுடன் சில காட்சிகள் மட்டும் பாக்கி இருக்கிறது. அது அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது. மே மாதம் படத்தின் ஷூட்டிங் ஒட்டுமொத்தமாக நிறைவு பெற்றுவிடும் என தகவல் வெளியாகி உள்ளது.

அதன் பிறகு படத்தின் கிராபிக்ஸ் மற்றும் எடிட்டிங் பணிகளுக்கு மூன்று மாதம் என இந்தியன் 2 திரைப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. இந்தியன் 2 படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் முழு அர்ப்பணிப்போடு பம்பரம் போல் சுழன்று வருகிறார்.

Most Popular