வர வர மாமியார் கழுதை போல் ஆனாராம் என்ற பழமொழிக்கு ஏற்ப தற்போது ஹாட்ஸ்டார் தன்னுடைய மகிமையை இழந்து வருகிறது. கடந்த ஆண்டு வரை இந்தியாவில் அதிக பேரால் பார்க்கப்படும் ஓ டி டி தளமாக ஹாட் ஸ்டார் விளங்கியது. ஆனால் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 2 கோடி பேர் தங்களுடைய ஹாட்ஸ்டார் ஒப்பந்தத்தை ரத்து செய்து இருக்கிறார்கள்.
மேலும் பலர் ஹாட் ஸ்டாருக்கு ரீசார்ஜ் செய்யவில்லை. இதன் மூலம் பெரும் இழப்பை சந்தித்து வரும் ஹாட்ஸ்டார் தற்போது 700 பேரை வேலையை விட்டு நீக்கியது. இதற்கு முக்கிய காரணம் ஐபிஎல் போட்டிக்கான உரிமத்தை ஹாட்ஸ்டார் புதுப்பிக்க தவறியது என சொல்லப்படுகிறது.
எனினும் ஹாட்ஸ்டார் இல் பல ஹாலிவுட் படங்களும் பல வெப் சீரிஸ்களும் தொடர்ந்து வெளியாகி கொண்டிருந்ததால் ரசிகர்கள் சிலர் ஹாட் ஸ்டாரை பயன்படுத்தினார்கள். அதில் சமீபத்தில் வெளியான தி லாஸ்ட் ஆஃப் ஹஸ் என்ற வெப் சீரிஸ் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான் ஹாட்ஸ்டார் ஒரு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதில் வரும் மார்ச் 30ம் தேதிக்கு பிறகு எச் பி ஓ நிறுவனம் தயாரித்த எந்த ஒரு நிகழ்ச்சியும் படமும் வெப் சீரிஸும் ஹாட் ஸ்டாரில் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாட்ஸ்டார் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக பலரும் ஹாட் ஸ்டார் இடம் தாங்கள் செலுத்திய பணத்தை திருப்பித் தருமாறு சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஏற்கனவே கிரிக்கெட் ஹாட் ஸ்டார் விட்டு சென்ற நிலையில் தற்போது ஹாலிவுட் படங்களும் எச்பிஓ நிறுவனம் தயாரித்த திரைப்படங்களும் நீக்கப்பட்டு இருப்பதால் மேலும் பல பயனாளர்கள் ஹாட்ஸ்டாரை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டு உள்ளது. கொரோனா காலத்தில் ஹாட் ஸ்டாரில் வெளியான மார்வெல்ஸ் சீரியல்களும் தற்போது ஏதும் வருவதில்லை. அதுவும் ஹாட்ஸ்டார் இன் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.