தமிழ் சினிமாவை பொருத்தவரை நெப்போர்டீஸம் அதிகமாகிவிட்டது. நடிகர்களின் மகனோ, மகளோ சுலபமாக சினிமாவில் களமிறங்கி விடுகிறார்கள்.
அந்த வகையில் தற்பொழுது தளபதி விஜயின் மகன் சஞ்சய் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்குனராக இருந்து தன் மகன் விஜயை நடிகராக அறிமுகம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது மூன்றாவது தலைமுறையாக நடிகர் விஜயின் மகனும் சினிமாவில் கால் எடுத்து வைத்திருக்கிறார் .இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்றுதான் என்பதற்கு அவர் வெளிநாட்டில் சென்று சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை படித்தே ஆதாரமாக அமைகிறது.
ஆனால் நடிகர் விஜய் இதற்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்பொழுது லைக்கா நிறுவனம் சஞ்சயை இயக்குனராக அறிவித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவரைப் பற்றிய செய்திகளை விளம்பரப்படுத்துவதற்கு பி ஆர் ஓ வாக சுரேஷ் சந்திரா என்பவரை லைக்கா நிறுவனம் தேர்ந்தெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இவர் தல அஜித்தின் பிஆர்ஓ வாக இருக்கக்கூடிய நபராவார். இவரைத்தான் லைக்கா சஞ்சயின் பிஆர்ஓவாக நியமித்திருக்கிறது இது பற்றி சுரேஷ் சந்திராவிடம் கேட்கப்பட்டபோது சற்று தயங்கி இருக்கிறார் ஆனால் தல அஜித் இடம் இதைப் பற்றி அவர் ஆலோசனை செய்த பொழுது கண்டிப்பாக இந்த வேலையை செய்யுமாறு தல அஜித் சுரேஷ் சந்திராவிடம் கூறியிருக்கிறார்.
இதன் காரணத்தால் சுரேச்சந்திராவும் இந்த பணியை ஒப்புக் கொண்டிருக்கிறார். இது தெரிந்த ரசிகர்கள் தல அஜித்தை பாராட்டி வருகிறார்கள். மேலும் தல அஜித் தளபதியின் மகனான சஞ்சய்க்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார். அஜித்தின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு ஒரு பெரும் மரியாதையை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் சஞ்சை இயக்க இருக்கும் இந்தத் திரைப்படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது ஆனால், இது போன்ற தகவல்கள் எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .விரைவில் சஞ்சை இயக்கப் போகும் திரைப்படங்களைப் பற்றிய தகவல்களும் வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.