தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். ஆனால் இவருக்கு தற்போதைய திரைப்படங்கள் வெற்றி பெறாத காரணத்தினால் பல விமர்சனங்களுக்கு உள்ளனார். மேலும் அவருக்கு ஏற்பட்ட தோல் நோயையும் அவருடைய திரையுல வாழ்க்கையை பாதித்தது. இந்நிலையில் கடைசியாக, இவர் நடித்து வெளிவந்த சாகுந்தலம் திரைப்படமும் பாக்ஸ் அப்பில் கலெக்ஷன் செய்ய தவறியது.
நடிகர் சமந்தா தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் சிறப்பாக நடித்து வருபவர். இவருடைய ஆரம்ப திரை வாழ்க்கை மிகவும் பிரகாசமாக ஆரம்பித்தது. இவர் ஆரம்பத்தில் நடித்து வெளியான திரைப்படங்கள் அனைத்திலும் இவருடைய நடிப்பு பாராட்டப்பட்டது. இந்த நிலையில் தெலுங்கு நடிகர் நாகசைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டு திரை வாழ்க்கைக்கு சிறிது காலம் முழுக்கு போட்டு இருந்தார். ஆனால் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து மீண்டும் தனது திரை வாழ்வை ” ஊ சொல்றியா மாமா “என்ற ஐட்டம் சாங் இன் மூலம் மீண்டும் தொடங்க ஆரம்பித்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் இவர் நடித்த தெலுங்கில் வெளியான சாகுந்தலம் திரைப்படம் படுதோல்வி அடைந்தது இதனால் தயாரிப்பாளருக்கு அதிக நட்டம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதற்க்கு தெலுங்கு திரை உலகில் முன்னணி முன்னணி தயாரிப்பாளரான சிட்டிபாபு கூறும்போது “சமந்தா ஸ்டார் ஹீரோயினியாக அவருடைய கேரியர் ஏற்கனவே முடிந்து விட்டது. தற்போது அவர் தன்னுடைய படங்களை பிரபலப்படுத்த கீழ்த்தரமான தந்திரங்களை எல்லாம் பயன்படுத்துகிறார். சமந்தா விவாகரத்துக்கு பிறகு புஷ்பா படத்தில் நடனம் ஆடினார். தன்னுடைய வாழ்க்கைக்காக அவர் இப்படி நடனம் ஆடுவதா? ஸ்டார் ஹீரோயினி என்ற ஸ்டேட்டஸை அவர் இழந்துவிட்டார்” என்று கூறினார்.
மேலும் அவர் கூறும்போது “தற்போது அவருக்கு வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்று வருகிறார். வாழ்க்கை முடிந்து விட்டது. இழந்த புகழை அவர் மீண்டும் பெற முடியாது. அவர் திரையுலகை தொடர வேண்டும் என்றால் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை ஏற்று நடிக்க தான் வேண்டும். யசோதா படத்திற்கு அவர் கண்ணீர் சிந்தி படத்தை வெற்றி பெற செய்ய முயற்சித்தார். தற்போது சாகுந்தலம் படத்தின் போதும் இதனையே செய்து அனுதாபம் தேடுகிறார்.எப்பொழுதும் சென்டிமென்ட் கை கொடுக்காது. படத்தில் அவரது கதாபாத்திரம் நன்றாக இருந்தால் ரசிகர்கள் பார்ப்பார்கள் ” என்று தயாரிப்பாளர் சிட்டிபாபு கூறியிருந்தார்.
இவரின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை சமந்தா ஒரு ஸ்கீரின் ஷாட்டைப் பகிர்வதன் மூலம் பதிலடி கொடுத்தார். அந்த பதிவில் அவர் “மக்கள் எப்படி முடி வளர்கிறார்கள்…” என்று ஓரளவு படித்தது. டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பது எப்படி காதுகளில் முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது என்பதுதான் அவளுக்கு கிடைத்த பதில். அவர் #iykwim என்ற ஹேஷ்டேக்கைச் சேர்த்தார், எனக்குத் தெரிந்தால் நான் உங்களுக்கு சொல்கிறேன் என்று அந்த பதிவில் ” பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு தயாரிப்பாளர் சிட்டிபாபுவை தாக்கி தான் பதிவிட்டுள்ளார், என அனைவரும் பேசி வருகிறார்கள். ஏனென்றால் சிட்டிபாபுவின் இரு காதுகளிலும் முடி வளர்ந்து இருக்கும் இது ஒரு வகை “பாடிசேமாக” பார்க்கப்படுகிறது. முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவர் இவ்வாறு பதிவிட்டு இருப்பது திரை உலகில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.