Monday, October 7, 2024
- Advertisement -
Homeசினிமாஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் மக்களுக்கும் போலீசுக்கும் மோதல்.. மேடையில்யே கூச்சல் போட்டுக் கத்திய நடிகை ரம்பா.....

ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் மக்களுக்கும் போலீசுக்கும் மோதல்.. மேடையில்யே கூச்சல் போட்டுக் கத்திய நடிகை ரம்பா.. !

இசைக் கச்சேரிகள் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன், ஹாரிஸ், சந்தோஷ் நாராயணன் போன்ற இசையமைப்பாளர்கள் மட்டுமில்லாமல் பாடகர்கள் கார்த்திக், ஹரிஹரன், ஷங்கர் மகாதேவன் உள்ளிட்டோர் வரை பலர் கடந்த 2 ஆண்டுகளாக இந்தியாவிலும் வெளியிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள்.

- Advertisement -

ரசிகர்கள் அனைத்தையும் மறந்து வைப் செய்து கொண்டாடுகிறார்கள். இருப்பினும் இது போன்ற கச்சேரிகளில் சில் முறை பெரிய சிக்கல்கள் வந்துள்ளன. கடந்தாண்டு ரஹ்மானின் நிகழ்ச்சியில் டிக்கெட்டுகள் சிக்கலால் பல மக்கள் உள்ளே கூட வராமல் தவித்தனர். மேலும் கூட்டத்தில் பாலியல் சீண்டல்கள், குழந்தை காணாமல் போனது மற்ற பிரச்சினைகளும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளகியது.

தற்போது அது போல பாடகர் ஹரிஹரனின் இசைக் கச்சேரியில் போலீஸாருக்கும் மக்களுக்கும் மோதல் உண்டாகி பெரிய கலவரம் ஆகிவிட்டது. தமிழ்நாட்டில் இசை நிகழ்ச்சிகள் செய்த கலைஞர்கள் கடந்த ஓர் ஆண்டாக இலங்கைக்கு சென்று அங்கும் இதனை நடத்தி வருகிறார்கள். சந்தோஷ் நாராயணனை தொடர்ந்து இலங்கையில் நடத்தப்பட்ட மற்றொரு இலவச கச்சேரி இந்த ஹரிஹரனின் நிகழ்ச்சி.

- Advertisement -

பாடகர் ஹரிஹரனின் ‘ ஸ்டார் நைட் ’ நிகழ்ச்சியில் பங்கேற்க ஐஷ்வர்யா ராஜேஷ், தமன்னா, ரம்பா ஆகிய பிரபலங்கள் சிலர் வந்திருந்தனர். இலவச அனுமதி என்பதால் கூட்டம் அதிகமாகியது. அப்போது திரண்டிருந்த மக்கள் ஒரு சமயத்திற்கு மேல் பிரபலங்கள் அமர்ந்திருக்கும் விஐபி பகுதிக்குள் மக்கள் நுழைய நினைத்தார்கள்.

- Advertisement -

அதனைத் தடுக்க நினைத்த போலீஸாருக்கும் மக்களுக்கும் தள்ளு முள்ளு மோதல் உண்டாகியது. இதில் சிலருக்கு மூச்சு திணறலும், காயங்களும் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். ரொம்ப நேரம் இந்த மோதல் நீடித்தால் மேடையிலேயே நடை ரம்பா, “ அமைதியாக இருங்கள். உங்களை நம்பித் தானே வந்து இருக்கிறோம். தயவு செய்து காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள். ” என கோபத்தில் கத்தியுள்ளார்.

Most Popular