Monday, May 20, 2024
- Advertisement -
Homeசினிமாடம்மி இல்லப்போ நான் ரம்மி-  கில்லியுடன் இணைந்த கையோடு  உச்சத்தை தொட்டது மங்காத்தா இயக்குனரின் கிராஃப்

டம்மி இல்லப்போ நான் ரம்மி-  கில்லியுடன் இணைந்த கையோடு  உச்சத்தை தொட்டது மங்காத்தா இயக்குனரின் கிராஃப்

சென்னை 28,மங்காத்தா,பிரியாணி, கோவா என்று ரசிகர்களுக்கு வெவ்வேறு பரிணாமங்களில் ஜாலியான  திரைப்படங்களை கொடுப்பதில் வல்லவரானவர் இயக்குனர் வெங்கட் பிரபு.
கதையில்லாமல் படம் எடுத்தாலும் எடுப்பார் தன் தம்பி பிரேம்ஜி இல்லாமல் படம் எடுக்க மாட்டார் என்று அவரை பலரும் கலாய்ப்பதற்கு ஏற்ப பிரேம்ஜிக்கு என்று தனியாக கதாபாத்திரங்களை உருவாக்குவார்.

- Advertisement -

தளபதி விஜயின் லியோ திரைப்படம் மிக விரைவில் திரைக்கு வர தயாராகிக் கொண்டிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதுவரை வந்த படங்களின் சாதனைகளை எல்லாம் தவிடு பொடியாக்கும் திட்டத்தில் பான்- இந்தியா படமாக லியோ படத்தை அக்டோபர் 19ஆம் தேதி ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் வெறித்தனமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

ஆர் பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சிறிய இடைவெளிக்குப்பின் விஜயின் 68 ஆவது படத்தை தனது நூறாவது தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது என்ற தகவல்கள் பரவி வந்த நிலையில் அந்த ஜாக்பாட் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு அடித்துள்ளது.

- Advertisement -

விஜயின் 68வது படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் அதுவும் தன்னுடைய வெள்ளி விழா படமாக தயாரிப்பதற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது.இப்படத்தின் இயக்குனராக வெங்கட் பிரபு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
90ஸ் கிட்ஸ்களின் செல்லபிள்ளையான யுவன் சங்கர் ராஜா நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி விஜயின் படத்தில் இசையமைக்க இருக்கிறார் என்பது கூடுதல் சுவாரஸ்யம்.

- Advertisement -

மங்காத்தா அஜித்துக்கு கொடுத்த என்ட்ரி பிஜிஎம் தல ரசிகர்கள் பெரும்பாலானோரின் செல்போன்கள் ரிங்டோனாக இன்றளவும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.அதைவிட தாறு மாறான இசையை விஜயின் படத்திற்கும் கொடுக்கும் ஆவலுடன் தீயாய் இசை அமைத்துக் கொண்டிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

விஜய்க்கு மிகப்பெரும் வெற்றியை தேடி தரும் படமாக விஜய் 68 படத்தை கொடுக்கும் உறுதியில் வெங்கட் பிரபு என் உதவி இயக்குனர்களுடன் தீவிரமாக திரைக்கதையை மெருகேற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.புள்ளிகளை உயர்த்துவதில் கில்லியான விஜய் உடன் படம் இயக்குவதாக முடிவான நாளில் இருந்து வெங்கட் பிரபுவின் கிராஃப் உச்சத்தில் உயர்ந்துள்ளது.

இதுவரை தன்னை உதவி இயக்குனராக அவரிடம் இணைந்து பணியாற்ற  இணைத்துக் கொள்ள வேண்டிய  ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனவாம்.அது மட்டுமா? சில முன்னணி நடிகர்களின் அடுத்த படித்திற்கான அழைப்புகளும்  காத்து கிடக்கிற தாம்.

வெங்கட் பிரபு தனக்கு ஏற்பட்ட திடீர் உச்சத்தால் திக்குமுக்காடி போய் உள்ளார்.RCB போன்ற டீம் கிடைத்தாலே  ஐபிஎல் பைனல்  போல் பட்டைய கிளப்பும்  நம்ம வெங்கட் பிரபு, இப்பொழுது CSK வே கிடைத்துள்ளது மனிதர்  சும்மா விடுவாரா.?ஒவ்வொரு காட்சியிலும் சிக்ஸரை எதிர்பார்த்து இப்போதே திரில் வெற்றிக்கு தயாராகி வருகிறார்கள் ரசிகர்கள்.

Most Popular