மூன்றாவது முறையாக போனி கபூர் தயாரிக்க ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த படம் துணிவு. தன் போட்டியாளரான விஜய்யின் வாரிசு படத்துடன் பொங்கலுக்கு மோதினார். வசூல் ரீதியாக இருபடங்களும் நல்ல கலெக்ஷன் செய்திருந்தாலும் விமர்சன ரீதியாக துணிவு படம் வாரிசை விட அபார வரவேற்பு பெற்றது.
வலிமை படத்தில் தடுமாறிய இயக்குனர் வினோத் இம்முறை பொறுமையுடன் சிறப்பாக கையாண்டுள்ளார். முதல் பாதியில் முழுக்க முழுக்க பெர்பார்மர் அஜித்தை வெளிக்கொண்டார். அடுத்த பகுதியில் அவர் சொன்னது போல வழக்கம் போல சமுதாயத்திற்கு கருத்துக்களை கூட்டி இறுதியாக ஆக்க்ஷன் படமாக நிறைவு செய்தார். பல ஆண்டுகள் சென்டிமென்ட் மட்டுமே கண்ட அஜித் ரசிகர்களுக்கு இது மெகா டிரீட்.
மங்காத்தாவுக்கு கொள்ளை அடிக்கும் ஈவில் அஜித் என்றால் இங்கு அதே வேலையை கூலாக செய்யும் மைக்கல் ஜேக்ஸன். இரண்டாம் பாதியில் படத்தின் ரூட் அப்படியே மாறி வில்லன் அஜித் ஹீரோவாக மாறுகிறார். படத்தில் ஜான் கொக்கென் குரூப்பில் வேலை செய்யும் ஆளாகவும் வங்கியின் மேனேஜராகவும் ஜி.எம்.சுந்தர் நடித்தார். வலிமை படத்திலும் இவர் அஜித்துக்கு எதிரான கதாபாத்திரத்தில் தான் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிஜமாகவே அடித்த அஜித்குமார்
இரண்டாவது பாதியில் வங்கியில் பணி புரிபவர்கள் மற்றும் அங்கு மாட்டிக் கொண்ட மக்களை, ஜி.எம்.சுந்தர் & ஜான் கொக்கேன் முன் வரிசையாக அமர வைத்து அவர்களது கேள்விகளை கேட்குமாறு அஜித் சொல்வார். அந்தக் காட்சியில் நிஜ வாழ்கையில் மக்களின் அவதிகளையும் எடுதுறைப்பார். அப்போது மேனேஜர் ஜி.எம்.சுந்தரரை நடிகர் அஜித் 2/3 முறை கன்னத்தில் அறைவார்.
அந்தக் காட்சியில் அஜித் தன்னை நிஜமாகவே அடித்தார் என சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ஜி.எம்.சுந்தர் கூறியுள்ளார். அவரே தன்னை உண்மையாக அடிக்குமாறு அஜித்திடம் கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். “அந்தக் காட்சி மிக தத்ரூபமாக இருக்கும் என்பதற்காக தான் கேஷுவலாக அடிக்க சொன்னேன். ” என்றார்.