தமிழ் திரையுலகில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் சிறந்த எழுத்தாளராகவும், இயக்குனராகவும் அறியப்பட்டவர், இதனால் இவரை பன்முக திறமை கொண்ட கலைஞர்கள் என்றும் பலரும் பாராட்டியுள்ளார்கள். தற்போதைய சிறந்த இயக்குனர்களில்,ஒருவராக இருக்கும் வெங்கட் பிரபுவின் தந்தையான கங்கை அமரன் நடிகர் கவுண்டமணிக்கு இடையே ஆன உறவு பற்றி பேசி உள்ளார்.
இயக்குனர்,எழுத்தாளர் கங்கை அமரனின் திரை வாழ்வை எடுத்துக் கொண்டால் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் பணியாற்றிய படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றி படங்களாகவே அமைந்துள்ளது. இந்த நிலையில் இவர் இயக்கிய கோவில் காளை படத்தில் நடிகர் கவுண்டமணிக்கு வாய்ப்பு வழங்கியிருந்தார்.
நடிகர் கவுண்டமணி எடுத்துக்கொண்டால் நகைச்சுவையில் அன்றைய காலகட்டத்தில் மிகவும் பெயர் போனவர். தமிழ் திரையுலகில் இருவர் நடித்தால் கண்டிப்பாக படம் வெற்றி பெறும் என்றால் அதில் காமெடி நடிகர்களான கவுண்டமணி மற்றும் செந்திலை எடுத்துக் கொள்ளலாம். இவர்கள் இருவரும் இணைத்த படங்கள் ஒன்று கூட தோல்வியடைந்ததில்லை அந்த அளவுக்கு இவர்கள் இருவரும் நடிகர் நடிகைகளுடன் சிறப்பாக நடித்திருப்பார்கள். தற்பொழுது அவருக்கு வயதாகி விட்டதால் நடிப்புத் துறையில் இருந்து ஒதுங்கி விட்டார்.
கவுண்டமணிக்கு வாய்ப்பு கொடுத்தது பற்றி கங்கை அமரன் பேசும்போது ” கோவில் காளை படத்தை இயக்கும்போது எனக்கு அளவு கடந்த பணக்கஷ்டம் இருந்தது. அதில் நான் வாய்ப்பு கொடுத்த கவுண்டமணி, என் பணக்கஷ்டத்தால் அவருக்கு சம்பளம் கிடைக்காமல் போய்விடுமோ? என்று அவருடைய சம்பளத்தை கறாராக கேட்டார். அவர் அப்படி கேட்காமல் இருந்திருந்தாலும் அவருக்கு பேசியபடி நாங்கள் பணம் கொடுத்திருப்போம். அவர் என் மேல் நம்பிக்கை இல்லாமல் அவ்வாறு நடந்து கொண்டது எனக்கு இன்றளவும் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது ” என்று பேசினார்.
நடிகர் கவுண்டமணி நடிக்கும் படங்கள் வெற்றி படங்களாக அமைந்ததால், என்னவோ அந்த காலகட்டத்தில் சம்பள விஷயங்களில் கராறாக இருந்தரோ? என்ற கேள்வியும் நம்முள் எழுகிறது.
கவுண்டமணி என்னிடம் அவ்வாறு நடந்து கொண்டதால் நான் அன்றிலிருந்து இன்றுவரை கவுண்டமணியை நேரடியாக சந்தித்து பேசியதும் கிடையாது. இனிமேல் பேசப்போவதும் கிடையாது.என்று கங்கை அமரன் மேலும் கூறினார்