தமிழில் ராஜா ராணி படத்தைத் தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மொத்தம் 4 பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் அட்லீ. இந்த வெற்றிகளைத் தொடர்ந்து பாலிவுட் பாட்ஷா ஷாரூக் கானை இயக்கினார். இரண்டு வருடங்களாக ஷூட்டிங்கில் இருந்த ஜவான் படம் அண்மையில் வெளியாகி தியேட்டர்களை கலக்கி வருகிறது.
கமர்ஷியல் படங்களுக்குப் பெயர் போனவர் அட்லீ. தன் வித்தையை ஷாரூக் கான் வைத்து காட்டி வசூலை பல மடங்கு உயர்த்தியுள்ளார். ஷாரூக் கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் வந்த ஜவான் தற்போது 1000 கோடி வசூல் சாதனை புரிந்துள்ளது.
இப்படம் வழக்கமான தென்னிந்திய சினிமா கதையாக இருந்தாலும் ஹிந்தி ரசிகர்களுக்கு அது ஃப்ரெஷ் கமர்ஷியல் சினிமா. அட்லீக்கு இப்படத்தின் மூலம் ஹிந்தியில் அபார வரவேற்பு எனக் கூறினால் மிகை ஆகாது. ஆனால் அதையும் தாண்டி அவருக்கு கிடைத்துள்ளது.
ஜவான் படத்தில் சண்டைக் காட்சிகள் எல்லாம் டாப் கிளாஸ். இதற்காக ஹாலிவுட் பயிற்சியாளர்களை அழைத்து படம் செய்துள்ளார் அட்லீ. ஜவான் திரைப்படம் தயாரான பிறகு சண்டைப் பயிற்சியாளர் ஸ்பீரோவுடன் இணைத்து பார்த்த சில ஹாலிவுட் இயக்குனர்களுக்கு படம் மிகவும் பிடித்துவிட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இயக்குனர் அட்லீயைத் தொடர்புகொண்டு ஹாலிவுட்டில் பணிபுரிய ஆசை இருந்தால் வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த செய்தியை அட்லீ சமீபத்தில் ஓர் நேர்க்கனாலில் கூறினார். கோலிவுட், பாலிவுட் என அடுத்தடுத்து கலக்கிய அட்லீ தற்போது ஹாலிவுட் வரை பெருமையைச் சம்பாதித்துள்ளார். ஜவான் படத்தின் மூலம் 1000 கோடி வசூல் செய்த முதல் தமிழ் இயக்குனர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.