சினிமா

“ கோலிவுட்டுக்கு திரும்பிவிட்டேன் ! மீண்டும் இந்த நடிகருடன் இணைந்து நடிக்க ஆசையாக இருக்கிறது ” – ஷ்ரேயா விருப்பம்

Shriya Saran

அழகு என்றால் அவள்தான், உலகிலேயே சிறந்த கலைஞன் உருவாக்கிய சிலை கூட ஈடாகாது. சில வருடங்களுக்கு முன்னர் தன் அழகால் மென்மையான சிரிப்பால் கோலிவுட்டையே கலக்கிய தேவதை ஷ்ரேயா. விஜய், ரஜினி, தனுஷ், விஷால், ஜீவா, ஜெயன் ரவி என பெரும்பான்மையான முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.

நடுவில் திருமணத்திற்கு முன்பே தமிழில் அவரது சினிமா வாழ்கை முன்னது போல இல்லை என்ற எண்ணத்தைத் கொடுத்தது. தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளில் நடித்துக் கொண்டு தான் இருந்தார். 2018ஆம் ஆண்டு தன் ரஷ்ய காதலன் ஆண்ட்ரூ கோசீவ்வைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு நடிக்க மாட்டார் என பலர் கூறி வந்ததை பொய்யாக்கினார் ஷ்ரேயா.

Advertisement

சென்ற ஆண்டு ஆர்.ஆர்.ஆர், தட்கா, த்ரிஷ்யம் ஹிந்தி ரீமேக்கில் நடித்தார். இந்த ஆண்டும் சில படங்கள் கையில் வைத்திருக்கிறார். அதில் ஒன்று தான் ‘ கப்ஜா ’ எனும் கன்னடப் படம். கிச்சா சுதீப், உபேந்தரா, ஷ்ரேயா நடிக்க இப்படத்தை ஆர்.சந்த்ரூ இயக்கியுள்ளார். வருதின்ற மார்ச் 17ஆம் தேதி கன்னட, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என மொத்தம் 7 மொழிகளில் வெளியாகிறது.

அதையொட்டி சென்னையில் அறிமுக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் பேசிய ஷ்ரேயா, “ தமிழ் எனக்கு நிறைய கொடுத்துள்ளது அதனால் தான் மீண்டும் வந்துள்ளேன். ” என்றார். மேலும் இப்படத்தில் நடிக்கும் போது சிரமப்பட்டதையுக் தெரிவித்தார். “ பெரும்பான்மையான காட்சிகள் செட் அமைத்து காட்சிப்படுத்தப்பட்டன. அப்போது அங்கு கிடந்த நிறைய தூசி என்னுடைய சைனஸ் பிரச்சனையை தூண்டியது. மிகவும் அவதிப்பட்டுவிட்டேன். ” என சற்று கஷ்டமாக பேசினார்.

Advertisement

ஷ்ரேயா சரன் விருப்பம்

அதோடு, “ திருமணத்திற்கு பின்பும் என் கணவர் நான் தொடர்ந்து படங்களில் நடிப்பதை ஒத்துழைத்தார். ரசிகர்களின் ஆதரவு இருக்கும் வரை நான் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன். தற்போது எனக்கிருக்கும் பெரிய ஆசை என்னவென்றால் ரஜினி சாருடன் நடிப்பது தான். ” என தன் விருப்பத்தைக் கூறியுள்ளார். இருவரும் இணைந்து நடித்த சிவாஜி தி பாஸ் திரைப்படம் மெகா பிளாக்பஸ்டர் ஆகியது. மீண்டும் இந்த காம்போவில் படம் வந்தால் நல்ல தான் இருக்கும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top