Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாஇளையராஜாவையும் பாரதிராஜாவையும் தோண்டினால் பல விஷயங்கள் வெளிவரும்- பாடலாசிரியர் வைரமுத்து பேச்சு

இளையராஜாவையும் பாரதிராஜாவையும் தோண்டினால் பல விஷயங்கள் வெளிவரும்- பாடலாசிரியர் வைரமுத்து பேச்சு

தமிழ் திரையுலகில் பாடலாசிரியர்களை நான் எடுத்துக் கொண்டால் ஒரு சிலர் மட்டுமே நாம் அனைவருக்கும் நினைவில் வருவார்கள். அந்த வகையில் 90களில் இருந்து தற்போது வரை சிறந்த பாடலாசிரியர் என்ற பெயரை தக்க வைத்து வருகிறார் பாடலாசிரியர் வைரமுத்து.

- Advertisement -

தமிழின் முன்னணி பாடல் ஆசிரியராக திகழ்ந்து வரும் இவர் படத்தில், எந்த சூழல் சொன்னாலும் அதில் தனது முத்திரையை ஆழமாகவே பதித்துவிடுபவர் அவர். அதனால்தான் அவரால் ஏழு முறை தேசிய விருது பெற முடிந்தது. அவர் இப்போதும் இளம் பாடலாசிரியர்களுடன் போட்டிப்போட்டு பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு வாய்ப்புகள் முன்னர் போல் பெரிதாக கிடைக்கவில்லை. என்ற கருத்து பரவலாக தமிழ் திரையுலகில் பேசப்பட்டு வருகிறது இதற்கு அவர் சார்ந்த சர்ச்சைகளும் ஒரு காரணமாக இருக்கலாம். என்றும் கூறப்பட்டு வருகிறது

இதனால் திரைத்துறையில் இருந்து பாடல் ஆசிரியர் என்ற பெயரை தக்க வைக்க முடியாமல் திரை துறையில் இருந்து விலகி விடுவார் என நினைக்க, நான் மறுபடியும் பிறந்து வருவேண்டா என்பது போல தற்பொழுது தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியாகும் வணங்கான் படத்தில் ஐந்து பாடல்கள் எழுதியுள்ளார். இவர் எழுதிய பாடல்களுக்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்க உள்ளார்.

- Advertisement -

இந்தப் பாடல்கள் அனைத்தும் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் வைரமுத்து.இந்த படத்திற்கு முன்பாக புதுமுக இயக்குனர் ஹரிசின் திருவின் குரல் படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ளார். அருள்நிதி ஹீரோவாக நடிக்க பாரதிராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆத்மிகா ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.

- Advertisement -

இதற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைரமுத்து அவர்கள் பேசும்போது “இன்னும் 100 ஆண்டுகளுக்கு பிறகு ஏன் தமிழ்நாடு நகரமயமாகிவிட்ட பிறகு அந்த வட்டாரச்சொற்களை பற்றி தெரியவேண்டுமென்றால் பாரதிராஜாவின் படங்களை பார்த்தால் போதும். இன்னும் சொல்லப்போனால், பழைய வாழ்க்கையை தெரிந்துகொள்வதற்கு இன்று கீழடியை தோண்டும் நாம்; இன்னும் 100 வருடங்கள் கழித்து பழைய வாழ்க்கையை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் பாரதிராஜாவை தோண்டினால் போதும், வைரமுத்துவை தோண்டினால் போதும், நான் இதை சொல்ல கூச்சப்படவில்லை, இளையராஜாவை தோண்டினால் போதும்” என்று பேசியுள்ளார்.

இசைஞானி இளையராஜாவும், பாடலாசிரியர் வைரமுத்துவும் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் 30 வருடங்களுக்கும் மேலாக இணைந்து பணியாற்றவில்லை என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.

Most Popular