சினிமா

மாநிலங்களை எம்.பியாக இசையமைப்பாளர் இளையராஜா ! நரேந்திர மோடி வாழ்த்து !

Ilayaraja member of rajya sabha

இந்திய சினிமாவின் அங்கமாக கருதப்படும் கலை வல்லுனர்களில் இளையராஜாவும் ஒருவர். மதுரை பண்ணையபுரத்தைச் சேர்ந்த இவர் 1976ஆம் ஆண்டு வெளியான அன்னக்கிலி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகின்றனர். 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார். இவரைப் பிடிக்காதவர்கள் கூட இவரின் இசைக்கு மயங்குவர்.

இவரின் திறமைக்கு தென்னிந்திய சினிமாவில் அனைத்து அங்கீகாரங்களும் கிடைத்துவிட்டன. தற்போது அரசியல் களத்திற்குள் குதித்துள்ளார் இளையராஜா. பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் இளையராஜாவை மாநிலங்களை எம்.பியாக தேர்ந்தெடுத்துள்ளார். இந்த இனிப்பான செய்திக்கு ரசிகர்கள், தலைவர்கள் என அனைவரும் அவர்களது வாழ்த்துகளை தெரிவித்துக் வருகின்றனர்.

Advertisement

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தன் டிவிட்டர் பக்கத்தில், “ இளையராஜா, தலைமுறை தலைமுறையாக மக்களைக் கவர்ந்தவர். அவரது படைப்புகள் பல உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கின்றன. மேலும், தாழ்மையான பின்னணியில் இருந்து உயர்ந்து இவ்வளவு சாதித்தார். அவரது வாழ்க்கைப் பயணம் சமமாக ஊக்கமளிக்கிறது. அவர் ராஜ்யசபாவுக்கு நியமனம் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ” என பதிவிட்டு தன் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை எனப்படும் ராஜ்ய சபா, இந்திய நாடாளுமன்றத்தில் ஓர் மேலவை. இதில் தற்போது 245 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 12 உறுப்பினர்கள் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களை, நம் நாட்டின் குடியரசுத் தலைவர் நேரடியாக தேர்ந்தெடுப்பார். மற்றவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

Advertisement

அந்த 12 நபர்களில் நம் மண்ணைச் சேர்ந்த, நம் மனதைக் கவர்ந்த நாயகன் ஒருவராக இருப்பது பெருமையாக உள்ளது. இளையராஜா மட்டுமல்லாமல் வீராங்கனை பி.டி.உஷாவும் இந்த பதவிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top