சினிமா

யுவன் சங்கர் ராஜா பிறந்த கதை.. இதுவரை வெளிவராத தகவலை கூறிய இளையராஜா

தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர்கள் ஒருவரான யுவன் சங்கர் ராஜா இன்று தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.காலை முதலே ரசிகர்கள் யுவன் சங்கர் ராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிய வருகின்றனர். இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் தந்தை இளையராஜா தன் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.

Advertisement

அதில் இதுவரை வெளிவராத தகவல் ஒன்றை அவர் குறிப்பிட்டு இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா ஈன்ற போது தாம் பாடல் இசை அமைக்கும் பணிக்காக இயக்குனர் மகேந்திரனுடன் வெளியூரில் இருந்ததாக கூறினார். மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் இருந்தும் தாம் அங்கு சென்று மனைவியை பார்க்காமல் திரைப்படத்திற்கு இசையமைக்கும் வேலையை தான் பார்த்தேன் என்று இளையராஜா குறிப்பிட்டார். அப்போது படத்தின் தயாரிப்பாளர் தம்மிடம் வந்து உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக செய்தி வந்துள்ளது என்று கூறினார்.இந்த செய்தியை கேட்டதும் தான் மகிழ்ச்சியில் துள்ளி குதித்ததாகவும், அந்த சந்தோஷத்தில் தான் ஜானி திரைப்படத்திற்காக செனோரிடா என்ற பாடலை தாம் இசையமைத்தேன் என்று கூறினார்.

நல்ல மனநிலையுடன் மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில் அந்தப் பாடல் இசையமைத்ததால் அது மாபெரும் சூப்பர் ஹிட் ஆனது என்றும் இளையராஜா கூறினார். அந்த மகன் வேறு யாரும் அல்ல அது யுவன் சங்கர் ராஜா தான் என்று குறிப்பிட்ட இளையராஜா தன் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.இளையராஜாவின் இந்த வீடியோ , காலை முதலிலிருந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

இளையராஜா போன்ற ஜாம்பவான் பெயரை கெடுக்காமல் தந்தைக்கு மகன் ஆற்றும் நன்றி என்ற திருக்குறளுக்கு ஏற்ப யுவன் சங்கர் ராஜாவும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் பணியாற்றி வரும் யுவன் சங்கர் ராஜா இன்றளவும் கொடிகட்டி பறந்து வருகிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top