Thursday, November 28, 2024
- Advertisement -
Homeசினிமாஇளையராஜாவின் இன்னொரு முகம்.. இவ்வளவு நல்ல மனிதரா?

இளையராஜாவின் இன்னொரு முகம்.. இவ்வளவு நல்ல மனிதரா?

இசை உலகின் சக்கரவர்த்தி என்றால் அது இசைஞானி இளையராஜா தான். இளையராஜாவின் இசை இல்லாமல் இங்கு பலர் தங்களுடைய வாழ்க்கையை நகர்த்த முடியாது. அந்த அளவிற்கு தமிழக மக்களின் உயிரோடு ஒன்றாக கலந்திருக்கிறார் இளையராஜா.

- Advertisement -

ஆனால் இளையராஜா திமிர் பிடித்தவர். புகழை விரும்பக் கூடியவர். அனைவரையும் ஏளனமாக பேசுவார் என்று பல விமர்சனங்கள் இளையராஜா மீது இருக்கிறது. ஆனால் இளையராஜாவுக்கு இதற்கு நேர் மாற்றாக இன்னொரு முகம் இருக்கிறது.

- Advertisement -

ஆனால் அதைப் பற்றி யாரும் பேசுவது கூட இல்லை. கையில் சம்பளம் கொடுக்கவில்லை என்றால் பின்னணி இசையை அமைத்து தர மாட்டேன் என்று பல இசையமைப்பாளர்கள் போர் கொடி தூக்கி நாம் செய்திகளை பார்த்திருப்போம்.

- Advertisement -

ஆனால் இளையராஜா பல திறமையான இயக்குனர்களுக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு பைசா கூட காசு வாங்காமல் இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார். மணிரத்தினம் அவர்கள் கன்னடத்தில் ஒரு படம் செய்யும்போது அதற்கு போதிய பட்ஜெட் இல்லையாம்.

ஆனால் மணிரத்தினத்தின் திறமையை பிடித்துப் போன இளையராஜா. உங்கள் படத்திற்கு குறைந்து செலவில்லை இசையமைத்து தருகிறேன் என்று பணியாற்றி இருக்கிறார். அதன் பிறகு மணிரத்தினத்தின் திறமையை அறிந்த இளையராஜா தமக்கு தெரிந்த பல தயாரிப்பாளர்களிடம் ஒரு நல்ல இயக்குனர் இருக்கிறார்.

அவருக்கு வாய்ப்பு கொடுங்கள் என சிபாரிசு செய்து இருக்கிறாராம். மேலும் பி வாசு தன்னுடைய படத்திற்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை என்றாலும் இலவசமாக இசை அமைத்து தருகிறேன் என்று இளையராஜா ஒற்றை பைசா கூட வாங்க வில்லையா. இதே போன்று இளையராஜா பல இளம் இயக்குனர்களின் வாழ்க்கையில் சம்பளமே இல்லாமல் பணியாற்றி விளக்கு ஏற்றி வைத்திருக்கிறார்.

மேலும் இளையராஜா 2015 ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தின் போது சுமார் ஒரு லட்சம் பேருக்கு சாப்பாடு பட்டணம் போர்வை ஆகியவற்றை இலவசமாக வழங்கியிருக்கிறார். ஆனால் இளையராஜாவின் இந்த நல்ல மனசு பலருக்கும் தெரியாமல் போனதே வருத்தம்.

Most Popular