இசை உலகை கடந்த 40 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் இளையராஜா, தற்போது இளம் மியூசிக் டைரக்டர்களுக்கு போட்டி அளிக்கும் விதமாக மாடர்ன் லவ் என்ற அமேசானில் வெளியான திரைப்படங்களுக்கு இசையமைத்து பட்டையை கிளப்பி இருக்கிறார்.
அதிலும் சில இசை கேட்பதற்கு அவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது. ஆனால் இந்த இசையை கொண்டாட முடியாத படி தற்போது இளையராஜாவின் பேச்சு அமைந்திருக்கிறது. தற்போது பேட்டி ஒன்றில் பேசிய இளையராஜா அவருடைய ஸ்டைலில் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கூறியிருக்கிறார்.
அதில் லவ் என்றாலே அது மாடர்ன் தானே பிறகு எதற்கு அதற்கு மாடர்ன் லவ் என பெயர் வைத்திருக்கிறார்கள். இதை நான் குற்றம் சொல்லவில்லை. நான் உண்மையை மட்டும் தான் பேசுவேன். இதற்காக என்னை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
என் இசைக்கு நான் மட்டும்தான் போட்டி வேறு யார் பற்றியும் நான் கவலை கொள்ள மாட்டேன். எனக்கு தலைகனம் இருப்பதாக சொல்கிறார்கள். இப்படி சொல்பவர்களுக்கு முதலில் எவ்வளவு தலைகனம் இருக்கும். என்னுடைய பாதையே வேறு நான் இசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்.
என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை கிடையாது. இசையை அமைப்பதற்கு முன்பு நான் எதுவும் திட்டமிடுவதும் கிடையாது. இயக்குனர் சொல்லும் போது அப்போது மனதில் என்ன தோன்றுகிறதோ அதனை இசையாக கொடுப்பேன்.
ஒரு பாடலுக்கு ஆறு டியூன் கொடுப்பேன். ஒரே நாளில் மூன்று படங்களுக்கெல்லாம் நான் இசை அமைத்திருக்கிறேன். எனக்கு தியாகராஜ குமரராஜா மூன்றாவது தலைமுறை இயக்குனர். என் இசையை ஓல்ட் ஸ்கூல் என்று சொல்லாதீர்கள்.
நான் 40 வருடத்திற்கு முன்பு அமைத்த இசையை தானே நீங்கள் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அது அந்த காலத்திலேயே மாடன் இசை அதனால் தான் இப்போது வரை நீங்கள் உயிரைக் கொடுத்து கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். எனவே ஓல்ட் ஸ்கூல் என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள் என்று இளையராஜா கூறியுள்ளார்.