சினிமா

“ தென்னிந்திய படங்களில் நடிக்கும் போது மூளையை வீட்டில் கழற்றி வைத்துவிடுவேன் ” – வேதாளம் வில்லன் ராகுல் தேவ் சர்ச்சைப் பேச்சு.. !

ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, மராத்தி, பெங்காலி, பஞ்சாபி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்தவர் ராகுல் தேவ். இவர் அதிகபட்சமாக வட இந்திய படங்களில் தான் நடித்துள்ளார். வர் வில்லன் கதாபாத்திரத்தை செய்பவர். தமிழிலில் நரசிம்மா, முனி, ஆதவன், வேதாளம் மற்றும் சென்ற ஆண்டு வந்த தி லெஜன்ட் படத்தில் நடித்துள்ளார்.

அண்மையில் நடந்த நேர்காணல் ஒன்றில் தென்னிந்திய திரைப்படங்களைப் பற்றி தரைக்குறைவாக பேசி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். “ தென்னிந்தியாவில் எடுக்கும் சினிமாக்கள் இன்னும் 1980 ஸ்டைலயே பின்பற்றுகின்றன. நிஜ வாழ்கைக்கு தொடர்பும் இருக்காது சிறிது லாகிக் கூட இருக்காது. ஹீரோயிஸம் மற்றும் கமர்ஷியலான பொழுபோக்கு காட்சிகளை வைத்து ரசிகர்களை கவர்து விடுகிறார்கள். ” என சரமாரியாக தாக்கியுள்ளார்.

Advertisement

அதோடு, “ நல்ல வலுவான ஜும் பாடியுடன் இருக்கும் என்னை சற்றும் வழுவில்லதா ஹீரோ அடிப்பதை நான் பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். அதோடு இல்லாமல் அதை ரசிக்கும் ரசிகர்களைக் கண்டும் நான் அமைதியாகவே தான் இருந்ததாக வேண்டும். ” என தன் வெறுப்பை காட்டியுள்ளார்.

ராகுல் தேவ் மேலும், “ அதனால் தென்னிந்திய படங்களில் நடிக்கச் செல்லும் போது நான் எனது மூளையை வீட்டில் கழற்றி வைத்துவிட்டு செல்வேன். ” என சர்ச்சையாக பேசியுள்ளார். “ நிஜத்தில் இருவர்கள் சண்டையிட்டால் யாரும் தாங்காது ஜிம் பாடியை காட்ட மாட்டார்கள். ஆனால் சினிமாவில் சட்டையைக் கிழித்து சிக்ஸ் பேக்ஸை காட்ட வேண்டியுள்ளது. இக்கற்பணைக்கு ரெக்கை கட்டி போது சாதாரண மனிதன் ரசிக்கிரான். ” எனக் கூறியுள்ளார்.

Advertisement

இவரது இந்தப் பேச்சு மிகவும் கண்டிக்கபட வேண்டியது. நிஜ வாழ்க்கையை முழுமையாக காட்ட வேண்டிய அவசியம் சினிமாவிற்கு இல்லை, ரசிப்பதற்கே சினிமா. வாழ்கையில் பல இன்னல்களை தாண்டி வீடு திரும்பும் ஒருவன் தன் பொழுதுபோக்குக்கு எதை ரசிக்கிறானோ அதைக் குற்றம் சாட்டுவது மிகவும் தவறு. ராகுல் தேவ் தன் வார்த்தைகளை அதிகம் காட்டியுள்ளார், நிச்சயம் அவர் பேசியது தவறு தான்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top