Tuesday, April 23, 2024
- Advertisement -
Homeசினிமாதைவான் செல்லும் கமல்ஹாசன்..! இந்தியன் 2 வில் முக்கிய காட்சி

தைவான் செல்லும் கமல்ஹாசன்..! இந்தியன் 2 வில் முக்கிய காட்சி

- Advertisement -

இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் இந்தியன் திரைப்படத்தினுடைய இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் உடைய அப்டேட்ஸ்கள் நாளுக்கு நாள் வந்து கொண்டு தான் உள்ளது.

அதுவும் 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இது திரைப்படம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டது. 2018ல் உலக நாயகனே பிறந்தநாள் அன்று திரைப்படத்தை லைக்கா  நிறுவனம் தயாரிக்க இருக்கிறது என்று தகவல் அதிகாரப்பூர்வமாக வெளிவந்தது. எதிர்பாராத விதமாக 2019ஆம் ஆண்டு திரைப்படம் படப்பிடிப்பின் போது ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் மூன்று நபர்கள் உயிரிழந்தார்கள்.

- Advertisement -

மேலும் 2020ல் இருந்து 2021 வரை கொரோனாவால் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதுஇதற்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடைய இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் முன்பு வெளிவந்து. ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி அடைந்து பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

- Advertisement -

அதற்குப் பிறகு மீண்டும் இந்தியன் 2 திரைப்படத்தை தற்பொழுது எடுத்து வருகிறார்கள். இதற்கு முன்பு இந்த திரைப்படத்தை ஆந்திராவில் உள்ள கடப்பாவில் எடுப்பது போன்று தகவல் வெளிவந்திருந்தது. இவற்றைத் தொடர்ந்து தற்பொழுது இந்த திரைப்படத்திற்கான படத்திற்கு தைவானில் நடக்க இருப்பதாக தகவல் வெளிவந்திருக்கிறது .

தைவானில் எடுக்கப்பட இருக்கும் காட்சிகளை நடிப்பதற்காக கமலஹாசன் தைவான் சென்றிருக்கிறார். அங்கு  நான்கு நாட்கள் படப்பிடிப்பிற்காக முடிவு செய்து இருக்கிறார்கள். பிறகு வடக்குழுவினர்கள் தென் ஆப்பிரிக்காவிற்கு செல்ல இருக்கிறார்கள் அங்கு ஒரு பிரம்மாண்டமான சண்டைக் காட்சி ஒன்று டிரெயினில் நடப்பதுபோல் எடுக்கப்பட இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

இந்தத் திரைப்படம் விரைவாக எடுக்கப்பட்டு வருவதாகவும் வருகின்ற பொங்கலுக்கு இந்தியன் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. உலக நாயகன் கமலஹாசனுடைய ரசிகர்கள் வருகின்ற பொங்கலை இந்தியன் 2 உடன் கொண்டாட காத்திருக்கிறார்கள்.

Most Popular