Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாஇந்த இரண்டு தேதியில் தான் இந்தியன் டு வெளியிடப்பட இருக்கிறதா மகிழ்ச்சியில் ரசிகர்கள்

இந்த இரண்டு தேதியில் தான் இந்தியன் டு வெளியிடப்பட இருக்கிறதா மகிழ்ச்சியில் ரசிகர்கள்

விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வேறு எந்த திரைப்படமும் வெளியிடப்படவில்லை. இதை தொடர்ந்து தற்பொழுது வெளியிடப்பட இருக்கும் இந்தியன் டு திரைப்படம் 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கி கொரோனாவால் முடங்கப்பட்டு விட்டது.

- Advertisement -

இதற்கு இடையில் விக்ரம் திரைப்படம் தந்த வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது மீண்டும் இந்தியன் டு திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி நிறைவு செய்யப்பட்டு இருக்கிறது. 1996 இல் வெளிவந்த இந்தியன் திரைப்படத்தின் முதல் பாகம் இன்று வரை ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.
அந்தத் திரைப்படத்தின் கதை களம், பாடல்கள், உலக நாயகனின் அசத்தலான நடிப்பு என்று எல்லாவிதத்திலும் பெயர் பெற்ற திரைப்படம் இந்தியன்.

ஏறுத்தாளை 28 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்த இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குனர் சங்கர் இயக்கி இருக்கிறார். ஒரு வயதான இந்திய மனிதர் சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் விதத்தை மிக அழகாக படமாக்கி இருப்பார் இயக்குனர் சங்கர். ஒவ்வொரு இந்தியனின் கடமை என்ன என்பதை படமாக்கியதுதான் இந்தியன் திரைப்படத்தின் கதை.

- Advertisement -

இது போன்ற பல நல்ல கருத்துக்களை படமாக்கி வெளியிட்டால் அது மக்கள் மத்தியில் எப்படி போய் ரீச் ஆகும் என்பதை யோசித்து எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் அளவில் வரவேற்கப்பட்டது . அதேபோல் தற்பொழுது இந்த இந்தியன் டு திரைப்படமும் நிச்சயமாக நல்ல கதைக்களமாக இருக்கும் அதில் அதே அசத்தலான நடிப்பில் உலகநாயகன் நடித்திருப்பார் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இந்தியன் டு திரைப்படம் எப்பொழுது வெளியிடப்படும் ? என்று ரசிகர்கள் கேட்டு கேட்டு சோர்ந்து விட்டார்கள் .இவர்களின் கேள்விக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது. வருகின்ற ஏப்ரல் மாதம் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலால் எந்த பெரிய திரைப்படங்களையும் வெளியிடாமல் தள்ளி வைத்து விட்டார்கள் .இதனால் தமிழ் சினிமாவே தற்போது வறண்டு காணப்படுகிறது என்பதை பல ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஒவ்வொரு திரைப்படமாக வெளியிடப்படும் என்றும் ஒவ்வொரு படக்குழுவினர்களும் வெளியிட்டு வரும் நிலையில் தற்போது இந்தியன் டு திரைப்படமும் வருகின்ற கோடை விடுமுறையை குறி வைத்து மே மாதம் 16ஆம் தேதி அல்லது 30ஆம் தேதி வெளியிடப்படும் என்ற தகவலை படக் குழுவினர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.

இதனால் ரசிகர்கள் பெருமகழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள் வரக்கூடிய மே மாத விடுமுறையை இந்தியன் டு திரைப்படம் பார்த்து மகிழுவதற்கு என்று பறைசாற்றி வருகிறார்கள் ரசிகர்கள்.

Most Popular