Wednesday, November 20, 2024
- Advertisement -
Homeசினிமாஇந்தியன் 2 டப்பிங் முடித்த கமல்ஹாசன்.. ஷூட்டிங் எப்போது முடிகிறது?

இந்தியன் 2 டப்பிங் முடித்த கமல்ஹாசன்.. ஷூட்டிங் எப்போது முடிகிறது?

1995 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் அந்த ஆண்டில் ரிலீஸ் ஆன அனைத்து தமிழ் படங்களை விட வசூலில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய அனைத்து மொழிகளிலும் இந்தியன் 2 திரைப்படம் சக்கை போடு போட்டது.

- Advertisement -

பேன் இந்தியா என்ற வாக்கியம் வருவதற்கு முன்பே அதற்கு எடுத்துக்காட்டாக  இந்தியன் 2 இருந்தது.  தற்போது இந்த படம் வெளியாகி 27 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இரண்டாவது பாகம் தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்த திரைப்படத்தில் இயக்குனர் சங்கர் மும்முரமாக தற்போது பணியாற்றி வருகிறார். அண்மையில் தென்னாப்பிரிக்காவில் படக்குழுவினர் ஹாலிவுட் தரத்தில் ரயிலில் சண்டை காட்சி ஒன்றை படமாக்கினார். தற்போது இந்தப் படத்தில் பெரும்பான்மையான காட்சிகள் முடிவடைந்து விட்டது.

- Advertisement -

நடிகர் கமல் தனக்குரிய காட்சிகளை நடித்து முடித்து விட்டாராம். மேலும் கமல் தனது டப்பிங் பணியையும் முடித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்தியன் 2 பட குழு சென்னையில் விடுபட்ட சில காட்சிகளையும் சில கூடுதல் காட்சிகளையும் எடுத்து வருகிறார்கள்.

இம்மாத இறுதியில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விடும். இதன் பிறகு ஷங்கர் படத்தில் எப்போதுமே கிராபிக்ஸ்க்கு என தனி காலம் பிடிக்கும். இதனால்  மூன்று மாதம் கிராபிக்ஸ் பணிகள் மற்றும் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிடும்.

தீபாவளிக்கு இந்தியன் 2வை திரைக்கு கொண்டு வர சங்கர் முடிவெடுத்துள்ளாராம். எதிர்பார்த்ததை விட இந்தியன் டு முன்பே ரிலீஸ் ஆக உள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்குக் காரணம் அஜித் படம் தாமதமானதால் லைக்கா நிறுவனம் படத்தை முன்கூட்டியே ரிலீஸ் செய்ய லைக்கா நிறுவனம் வற்புறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Most Popular