Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாஹெலிகாப்டரில் கமல் - இந்தியன் 2வில் அப்படி ஒரு தொடர்பு இருக்கா? வெளியான் ஸ்டில்

ஹெலிகாப்டரில் கமல் – இந்தியன் 2வில் அப்படி ஒரு தொடர்பு இருக்கா? வெளியான் ஸ்டில்

- Advertisement -

2017 ஆம் ஆண்டு  உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் எடுக்க இருப்பதாக தகவல் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து இங்கு திரைப்படத்தின் உடைய முதல் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்த திரைப்படத்தை  இயக்குனர் சங்கர் இயக்கிக் கொண்டிருந்தார். லைக்கா தயாரிப்பு நிறுவனம் மற்றும் ரெட் ஜெயின்ஸ்  இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டு வந்தது. மேலும் சென்னை ராஜமுந்திரி, போபால் போன்ற இடங்களில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு கொண்டிருந்தது.

இந்த நிலையில் எதிர்பாராத விடும் ஆக படப்பிடிப்பின் போது ஒரு விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தால் படக்குழுவினரில் சிலருக்கு உயிரிழப்பு கூட ஏற்பட்டது.அவற்றின் காரணமாக சில நாட்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதற்குப் பிறகு இந்த திரைப்படத்தை எடுக்கத் துவங்கலாம் என்று எண்ணிய நிலையில் கொரோனா போன்ற காரணங்களால் மீண்டும் இந்த திரைப்படம் எடுப்பதற்கு தாமதமானது.

- Advertisement -

அனைத்து தடைகளையும் மீறி கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்த திரைப்படத்தை எடுக்க தொடங்கி இருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தில் உலகநாயகன் கமலஹாசன் உடன் இணைந்து ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள். காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத்தி சிங் ,பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, டெல்லி கணேஷ், மனோபாலா சுதீப் க்ளூசன் கோவர் என பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

- Advertisement -

மேலும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் தற்பொழுது உலகநாயகன் கமலஹாசன் ஹெலிகாப்டரை விட்டு இறங்கி நிற்பது போன்ற ஒரு புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது. இது இந்தியன் 2 படப்பிடிப்பு படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் இது ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பா நகரில் எடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

இதில் உலக நாயகனை பார்ப்பதற்கு மப்த்தியில் இருக்கும் வெளிநாட்டு காவல் அதிகாரியை போன்று தோன்றுகிறார்.ஒரு கணம் இந்த புகைப்படத்தை பார்ப்பதற்கு வேட்டையாடு விளையாடு திரைப்படம் நினைவிற்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular