Friday, April 19, 2024
- Advertisement -
Homeசினிமாஇந்தியன் 2 ரிலீஸ் தேதியில் பெரிய மாற்றம்..! தள்ளிப் போகும் தல 62

இந்தியன் 2 ரிலீஸ் தேதியில் பெரிய மாற்றம்..! தள்ளிப் போகும் தல 62

- Advertisement -

இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் படப்பிடிப்பு விரைவாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத்தி சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்கா சமுத்திரகனி போன்ற பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

இந்தத் திரைப்படத்தோடு இயக்குனர் ஷங்கர் ஆர் சி 15 என்ற தெலுங்கு திரைப்படத்தையும் ராம்சரண் தேஜை வைத்து இயக்கிக் கொண்டிருந்தார். சில நாட்களுக்கு முன்பு தான் அதிலிருந்து வந்து இந்தியன் 2 திரைப்படத்தின் இயக்கத்தில் இணைந்திருக்கிறார் .
தற்பொழுது இந்தத் திரைப்படத்தின் உடைய படப்பிடிப்புகள் இரவு நேரத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த திரைப்படத்திற்கு டப்பிங் வேலைகளும் வருகின்ற ஜூலை மாதம் நிறைவடைகிறது.

- Advertisement -

இந்த ஆண்டு வருகின்ற தீபாவளியன்று இந்தியன் டு திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு படக்குழுவினர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள். இதனால் ஒரே நேரத்தில் இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு தேவையான முன்னேற்பாடுகளையும் படக்குழுவினர்கள் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

இவர்கள் செய்யும் முயற்சியின் வேகத்தை பார்க்கும் பொழுது ரசிகர்கள் வருகின்ற தீபாவளிக்கு திரைப்படத்தை காண போகிறோம் என்று எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் அவர்களுடைய எதிர்பார்ப்பை நிச்சயமாக பட குழுவினர்கள் நிறைவேற்றுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்தியன் டு திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் தனுஷ்கோடியில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தொடர்ந்து பகலிலும் இரவிலும் மாற்றி மாற்றி படு சுறுசுறுப்பாக படப்பிடிப்பு பணிகள் நடைபெறுவதாக தெரிகிறது.

இதற்கு காரணம் இந்தியன் டு திரைப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முதலில் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் பொங்கலுக்கு பிரபாஸ் படம் ஒன்று ரிலீசாகிறது. லைக்கா திட்டமிட்டுள்ள அஜித் திரைப்படம் இன்னும் அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்படவில்லை. இதனால் முதலில் திட்டமிடப்பட்ட வகையில் அஜித் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் லைக்கா நிறுவனம் இந்தியன் 2 படத்தை தீபாவளிக்கும் அஜித் படத்தை பொங்கலுக்கும் ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக இயக்குனர் சங்கரிடம் படத்தின் வேலையை துரிதப்படுத்துமாறு லைக்கா கூறியுள்ளது. இதனால் இந்தியன் டு தீபாவளிக்கு ரிலீசாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Most Popular