சினிமா

இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கும் தேதி எப்போது..? கமல் எங்கு இருக்கிறார் தெரியுமா?

விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் கமலஹாசன் பம்பரம் போல் சுழன்று வருகிறார். தற்போது கமல்ஹாசன் அடுத்து எந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி தான் அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் உள்ளது. இந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் சில பல பிரச்சனைகளால் பாதியில் நின்றது.

இந்த படத்தை தொடர இயக்குனர் சங்கர் மறுத்துவிட்டார்.தயாரிப்பு நிறுவனத்திற்கும் சங்கருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதால் படம் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் இந்தியன் 2 திரைப்படத்தில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். இதனால் இந்த திரைப்படம் கைவிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் இயக்குனர் சங்கரும் தெலுங்கு சினிமாவுக்கு சென்று அங்கு ராம் சரணை வைத்து படம் ஒன்றை எடுத்து வருகிறார்.

இதன் பிறகு ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் திரைப்படத்தை ரீமெக் செய்ய முடிவெடுத்துள்ளார். இதனால் இந்தியன் 2 என்ன ஆனது என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் விக்ரம் படம் கொடுத்த வெற்றி இந்தியன் 2வுக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளது . இந்தியன் 2 திரைப்படத்தை மீண்டும் தொடங்க கமல் மற்றும் சங்கர் மற்றும் தயாரிப்பு தரப்பு ஒப்புக்கொண்டது.

இந்த நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தின் மேக்கப் உள்ளிட்ட பணிகளுக்காக நடிகர் கமல்ஹாசன் அமெரிக்கா சென்று உள்ளார். அங்கு மூன்று வாரம் தங்கி இந்தியன் 2 படத்திற்காக அவர் தயாராக இருக்கிறார். இதனைத் தொடர்ந்து சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தியன் 2 திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும் என சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன் நடித்த சில நாயகர்கள் தற்போது மாற்றப்பட்டு அந்த காட்சிகளை மீண்டும் எடுக்கவும் பட குழு திட்டமிட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

TOP STORIES

To Top