Thursday, March 28, 2024
- Advertisement -
Homeசினிமாதமிழ் சினிமாவில் கால் பதிக்கும் "தல" தோனி! - படப்பிடிப்பு பற்றிய விவரங்கள் நாளை அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் “தல” தோனி! – படப்பிடிப்பு பற்றிய விவரங்கள் நாளை அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ்.தோனி. சிஎஸ்கே ரசிகர்களால் தல என அழைக்கப்படும் தோனி இந்திய அணிக்காக இரண்டு உலக கோப்பைகளை வாங்கிக் கொடுத்தவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் தொடர்ந்து வெற்றிகரமான கேப்டனாக இருந்து கொண்டிருக்கிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதனை அடுத்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் .

- Advertisement -

கிரிக்கெட் விளையாட்டுடன் இயற்கை விவசாயம் செய்து வந்த எம் எஸ் தோனி கடந்த அக்டோபர் மாதம் ஒரு சினிமா தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து அதன் மூலம் இந்தியாவில் இருக்கின்ற மொழிகளில் திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டு இருந்தார். தோனி என்டர்டைன்மெண்ட்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை துவக்கிய எம்.எஸ். தோனி கடந்த டிசம்பர் மாதம் தன்னுடைய முதல் படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

இதற்கு முன் இந்த தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சிஎஸ்கே அணியை பற்றிய ஒரு ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது . தற்போது முதல் முறையாக ஒரு கமர்சியல் சினிமாவை இயக்க இருக்கிறது . தமிழ்நாட்டு மக்களின் அன்பிற்காக தனது முதல் படத்தை தமிழிலேயே தயாரிக்கிறார் எம்.எஸ் தோனி. இதனை அடுத்து தனது இரண்டாவது படத்தை தளபதி விஜய் வைத்து தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

- Advertisement -

தோனி தயாரிக்க இருக்கின்ற இந்த திரைப்படத்தை ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன . மேலும் இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக ஒப்பந்தமாக இருப்பதாக தெரிகிறது . இத்திரைப்படத்திற்கான நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இசையமைப்பாளர்கள் என படப்பிடிப்பு குழு பற்றிய முழு விவரங்களையும் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள். தல தோனி தயாரிப்பாளராக தன்னுடைய இன்னிங்ஸை தமிழகத்திலிருந்து தொடங்குவது சிறப்பான ஒன்று .

- Advertisement -

எம் எஸ் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு விவசாயம் உடற்பயிற்சி கூடம் துணி நிறுவனம் என பல்வேறு விதமான தொழில்களில் ஈடுபட்டு வந்தார். தற்போது அவர் சினிமா துறையிலும் கால் பதிக்க இருக்கிறார். தமிழ்நாடு ரசிகர்கள் மீது கொண்ட அன்பின் காரணமாக தனது முதல் படத்தை தமிழிலிருந்து துவக்குகிறார் தோனி .

Most Popular