Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமா“நம்ம நாட்ல இப்டி ஒன்னு இருக்குனு அவங்களுக்கு தெரியாது போல! ..” - திருமணத்துக்காக மதம்...

“நம்ம நாட்ல இப்டி ஒன்னு இருக்குனு அவங்களுக்கு தெரியாது போல! ..” – திருமணத்துக்காக மதம் மாறிதாக கேள்வி எழுப்பியவர்களுக்கு குஷ்பூ பதிலடி !

1980 களில் இருந்து தமிழ் திரை உலகில் சிறந்த நடிகையாக கோலாட்சி, ரசிகர்கள் அனைவரின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை குஷ்பூ. இவர் தற்பொழுது தேசிய கட்சி ஒன்றில் ஐக்கியமாகியுள்ளார்.

- Advertisement -

நடிகை குஷ்பூ தற்பொழுது தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர்களில் ஒருவராக பதவி வகிக்கிறார்.இதனால் முழு நேரமும் பெண்கள் சார் விஷயங்களில் அதிகமாக ஈடுபட்டு வருகிறார். மேலும் அரசியல் எனும் அதிகமாக தற்பொழுது தென்படுகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் சுதீப் சன் இயக்கிய கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகி நாடு முழுவதும் பல்வேறு அதிருப்திகளையும்,எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. இந்த படம் இஸ்லாமிய சமூகத்தை எதிர்ப்பது போல இருப்பதால் பலரும் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பி உள்ளார்கள். குஷ்பூவும் இந்த படத்தின் மையக்கருத்தை வெளிப்படுத்தி மதமாற்றம் பற்றி அவருடைய அவருடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

நடிகை குஷ்புவும் இயக்குனர் சுந்தர் சி யும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நிலையில் அவருடைய திருமணம் பற்றி அவருடைய ட்விட்டர் தளத்தில் அவர் பதிவிட்டு இருப்பது ” என்னுடைய திருமணம் பற்றி பேசுபவர்கள் அனைவரும், கொஞ்சமாவது, எங்கிருந்தாவது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். நம்மில் பலருக்கும் நம் நாட்டின் திருமண சட்டங்கள் பற்றி எந்த அறிவும் சிறிது கூட இல்லை. நான் என்னுடைய திருமணத்திற்காக மதம் மாறவும் இல்லை மதம் மாற அவரும் என்னை வற்புறுத்தியதும் இல்லை ” என்று பதிவிட்டு இருந்தார்.

- Advertisement -

மேலும் அந்த பதிவில் நடிகை குஷ்பு ” எங்களுடைய 23 வருட திருமண வாழ்வு நம்பிக்கை, சமத்துவம் மரியாதை மற்றும் அன்பு இவை நான்கும் கலந்ததாகவே எங்களுக்கு இந்த வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. எனவே இதில் யாருக்கும் சந்தேகம் இருந்தால் அவர்கள் இதை முயற்சித்துப் பார்க்கவும், கட்டாயம் இது உங்களுக்கு தேவைப்படும் என்று அந்த பதிவில் பதிவிட்டிருந்தார்.

Most Popular