Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாசண்டை காட்சிக்காக ஒரு வாரம் பயிற்சி.. 72 வயதிலும் மாஸ் காட்டும் ரஜினி

சண்டை காட்சிக்காக ஒரு வாரம் பயிற்சி.. 72 வயதிலும் மாஸ் காட்டும் ரஜினி

- Advertisement -

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தைப் பற்றி அப்டேட்ஸ்கள் தற்பொழுது வந்திருக்கிறது. விறுவிறுப்பாக படப்பிடிப்பில் இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு சண்டைக் காட்சி படம் ஆக்க இருக்கிறார்கள்.

பொதுவாக சண்டை காட்சிகளுக்கு பெரிய அளவில் யாரும் பயிற்சி எடுப்பதில்லை. அந்த பொழுதில் ஸ்டன்ட் மாஸ்டருக்கு சொல்வதை அவர்கள் செய்ய வேண்டும். இல்லையேனில் டூப் போட்டு கொள்வார்கள். அப்படித்தான் பெரும்பாலும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

ஆனால் தற்பொழுது ஜெய்லர் திரைப்படத்தில் எடுக்கப்பட இருக்கும் இந்த சண்டை காட்சி மிக மிக பிரம்மாண்டமான கட்சியாகும் என்று பட குழுவினர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
இது திரைக்கு வந்தால் இப்படி ஒரு சண்டைக் காட்சியா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு வித்தியாசம் நிறைந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த சண்டைக் காட்சிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய இந்த 72 வது வயதிலும் சற்றும் அசராது ஒரு வார காலமாக   திரைப்படத்தின் உடைய ஸ்டாண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சிவா விடம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதைத்தொடர்ந்து இந்த சண்டைக் காட்சியின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

பொதுவாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படங்களில் ஆக்சன் ஸ்டைல் இவையெல்லாம் சற்றும் குறைவில்லாமல் இருக்கும். இந்த நிலையில் இப்படி ஒரு தகவல் வெளிவந்திருப்பதால் ரசிகர்கள் இந்த திரைப்படத்தை காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தினுடைய எனர்ஜி நிறைந்த அந்த சண்டைக் காட்சி பார்ப்பதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது.

இதில் நடிகர் ரஜினிகாந்த் பெரிய அளவில் டூப் போட்டு நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது நடிகர் ரஜினிகாந்த் வயதிற்கு தகுந்தாற்போல் இந்த சண்டை காட்சிகள் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் காயம் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் சண்டை காட்சி குறித்து பயிற்சி எடுக்கப்பட்டு இருக்கிறது. இது படத்தின் கிளைமாக்ஸ் காட்சியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இருக்கிறது. இதைத் தொடர்ந்து மூன்று மாதம் டப்பிங் மற்றும் பின்னணி இசை கொடுக்கும் பணி நடைபெறும். அதனை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டுள்ளது.

Most Popular