Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாகேஜிஎப் சாதனையை உடைத்த ஜெய்லர்

கேஜிஎப் சாதனையை உடைத்த ஜெய்லர்

உலகம் எங்கும் இருக்கும் ரசிகர்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பையும் கொண்டு இரண்டு நாட்களில் திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கிறது ஜெயிலர் திரைப்படம்.

- Advertisement -

5 மொழிகளில் வெளியிடப்பட இருக்கும் இந்த திரைப்படத்திற்கு தற்பொழுது முன்பதிவு நடைபெற்று வருகிறது. முன்பதிவு செய்வதற்கான பணி தொடங்கிய உடனேயே கட்டி வைத்திருந்த அனை முட்டி உடைந்தது போல் ரசிகர்கள் திரண்டு வந்து அவராகவர்களுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகிறார்கள்.

தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு கன்னடம் ஹிந்தி போன்ற பழமொழிகளிலும் ஃப்ரீ புக்கிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதிலும் கன்னடத்தில் கேஜிஎப் திரைப்படத்திற்கு அதிகாலை காட்சிகளுக்கான முன்பதிவு எண்ணிப் பார்க்காத அளவிற்கு பதிவு செய்யப்பட்டது.

- Advertisement -

அதைவிட பல மடங்கு அதிகமாக தற்பொழுது ஜெய்லர் திரைப்படத்திற்கு அதிகாலை காட்சிகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 155 அதிகாலை காட்சிகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

ஜெய்லர் திரைப்படத்தின் உடைய இசை வெளியீட்டு விழாவில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் உலகம் எங்கும் சூப்பர் ஸ்டார் என்றால் அது நமது ரஜினிகாந்த்தான் என்று சொல்லியது உண்மைதான்.

இந்த வயதிலும் இவருடைய நடிப்பை பார்க்க வெளிநாடுகளில் கூட ஆர்வமாக ரசிகர்கள் முன்பதிவை செய்து வருகிறார்கள்.

வரக்கூடிய ஆகஸ்ட் 10ஆம் தேதி ஏதோ ஒரு பண்டிகை நாள் போல் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த அளவிற்கு ஒரு திரைப்படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு வைக்கிறார்கள் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் காரணமாவார்.

எத்தனை நடிகர்கள் வந்தாலும் அவருக்கென்று சினிமாவில் தனி இடம் உண்டு மகுடம் சூடா அரசராக அவர் தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வருகின்றார். அதேபோல் பீஸ்ட் திரைப்படத்தில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து மிகப் பொறுப்புடன் இயக்குனர் நெல்சனும் இத்திரைப்படத்தை பணியாற்றி இருக்கிறார்.

இவர்களின் கூட்டணியில் வெளிவர இருக்கும் இந்த ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நிச்சயமாக மெகா ஹிட் ஆக ஆகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கர்நாடகாவைப் பொறுத்தவரை இந்த திரைப்படத்தில் கர்நாடக சினிமாவின் பிரபலமான சிவராஜ்குமார் நடித்திருக்கிறார் என்பதால் கூடுதல் ஆர்வம் காட்டி வருகிறார்கள். கே ஜி எஃப், ட்ரிபிள் ஆர் போன்ற திரைப்படங்களை முறியடித்து வருகிறதாம்.

தற்பொழுது வெளியாக இருக்கும் ஜெயிலர் திரைப்படம் அதே போல் மலையாளத்திலும் மோகன்லாலின் ஹிந்தியில் தமன்னாவும் ஜாக்கி செராப்பும் நடித்திருப்பதால் மலையாளம் மற்றும் ஹிந்தியிலும் ரசிகர்களுக்கு பெருமளவில் ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டில் இத்திரைப்படத்தினுடைய விமர்சனமும் வசூல் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

Most Popular