நடிகர் ரஜினிகாந்த் தாம் ஒரு சூப்பர் ஸ்டார் தான் என்பதை 72 வயதிலும் நிரூபித்து இருக்கிறார். தர்பார், அண்ணாத்த படங்களின் தோல்விக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் திரைப்படம் பட்டையை கிளப்பி வருகிறது.
திரையிட்ட திரையரங்குகளில் எல்லாம் படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக திருவிழா போல் கலைக்கட்டு வருகிறது. இந்த நிலையில் ஜெயிலர் படம் மூன்றாவது நாளில் துணிவு திரைப்படத்தின் சாதனையை முறியடித்த நிலையில் தற்போது நான்கு நாள் முடிவில் விஜயின் பல சாதனைகளை முறியடித்து இருக்கிறது.
அதன்படி உலகம் முழுவதும் ஜெயிலர் திரைப்படம் 300 கோடி வசூல் சாதனையை படைத்திருக்கிறது. இதன் மூலம் விஜயின் சர்க்கார்,மெர்சல், மாஸ்டர் பீஸ்ட் போன்ற திரைப்படங்களின் ரெக்கார்டுகளை ஜெயிலர் முறியடித்து விட்டது.
இதேபோன்று இன்று பிகில் மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்களின் வசூலை ஜெய்லர் முறியடித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே நிலை நீடித்தால் ஒரு வாரத்திலேயே ஜெய்லர் திரைப்படம் 400 கோடி வசூலை எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு அதிக வசூலை பெற்ற கமலஹாசனின் விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் ஆகிய வசூலையும் ஜெயிலர் முறியடித்து விடும் என கூறப்படுகிறது.
ஜெய்லர் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசூல் சாதனையை குவித்து வருகிறது. மேலும் வெளிநாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலை ஜெய்லர் திரைப்படம் படித்திருக்கிறது. இதேபோன்று தெலுங்கிலும் ஜெயில்லருக்கு மவுஸ் அதிகரித்து உள்ளது.
சிரஞ்சீவி நடித்த போலா சங்கர் திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று தோல்வியை தழுவி இருக்கிறது. இதனால் பல திரையரங்குகளில் ஜெயிலர் படம் போடப்பட்டு வருகிறது .
இதேபோன்று நடிகர் விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் எப்போதுமே அதிகம் இந்த வகையில் கேரளாவில் அதிக வசூலை ஜெயிலர் திரைப்படம் படைத்து மற்ற விஜய் பட சாதனைகளை முறியடித்து இருக்கிறது.